ஹோம் /நியூஸ் /திருவாரூர் /

இது தார் ரோடா? மன்னார்குடி அருகே 10 நாட்களில் பெயர்ந்து போன தார் சாலை.. அதிருப்தியில் பொதுமக்கள்

இது தார் ரோடா? மன்னார்குடி அருகே 10 நாட்களில் பெயர்ந்து போன தார் சாலை.. அதிருப்தியில் பொதுமக்கள்

பெயர்ந்துபோன புதிதாக போடப்பட்ட தார்சாலை

பெயர்ந்துபோன புதிதாக போடப்பட்ட தார்சாலை

Thiruvarur | திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே புதியதாக அமைக்கப்பட்ட தார் சாலை, பத்தே நாட்களில் பெயர்ந்து வந்தத சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுக்கா ஆய்குடி பஞ்சாயத்தில் உள்ள அகரபொதக்குடி கிராமத்துக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சாலை அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் கடந்த மாதம் வரை சாலை பணிகள் தொடங்கவில்லை.

இது குறித்து கிராம மக்கள் அதிகாரிகளிடம் சென்று கேட்ட நிலையில் கடந்த 20 தினங்களுக்கு முன்னர் வாழச்சேரி முதல் மணல்மேடு கிராமம் வரை 2 கிலோ மீட்டர் தூரம் தார் சாலை போடப்பட்டது. இந்த சாலை அருகில் உள்ள திட்டானி முட்டம், ஆலத்தாங்குடி, புதுக்குடி, கண்கொடுத்தவனிதம், காவழக்குடி என 6 கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாகும்.

சாலை பணிகள் நடைபெற்று கொண்டிருந்த போதே சாலையின் தரம் சரியில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் தற்போது சாலையில் போடப்பட்ட தார் கலந்த ஜல்லி கற்கள் பெயர்ந்தது.

Also see... “நானும் ரங்கசாமியும் அண்ணன் தங்கை மாதிரி..” ஆளுநர் தமிழிசை பேச்சு

இதனால் இந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வாகன ஓட்டிகளுக்கு விபத்து நேர்வதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர். மேலும் இந்த சாலையை முறையாக செப்பனிடவில்லை என்றால் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த இருப்பதாக கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளார்: கு.ராஜசேகர், திருவாரூர்

First published:

Tags: Damaged, Road Safety, Tiruvarur