ஹோம் /நியூஸ் /திருவாரூர் /

கனமழை பாதிப்பு : குறுவை நெற்பயிர்களுக்கு நிவாரணம் அறிவித்தது தமிழ்நாடு அரசு!

கனமழை பாதிப்பு : குறுவை நெற்பயிர்களுக்கு நிவாரணம் அறிவித்தது தமிழ்நாடு அரசு!

நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்

நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்

கனமழையால் நஷ்டமடைந்த தங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என சம்பா, தாளடி சாகுபடி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thiruvarur, India

கனமழையால் பாதிக்கப்பட்ட குருவை நெற்பயிர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. அதன்படி ஒரு ஹெக்டேருக்கு 13 ஆயிரத்து 500 ரூபாய் திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 4 கோடியே 9 லட்சம் திருவாரூர் மாவட்டத்திற்கு தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. 

திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர் சாகுபடிக்கு தமிழக அரசு 7 கோடியே ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. திருவாரூர் பயிர் சேதம் தொடர்பாக மாவட்ட வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தினர். இந்த கணக்கெடுப்பில் 13 ஆயிரத்து 325 ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஒரு ஹெக்டேருக்கு 13 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனால் குறுவை நெற்பயிர் சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர் சாகுபடிக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திற்கு 7.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

75 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன வசதிக்காக இந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து மே 24ஆம் தேதி முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு ஒரு லட்சத்து 50,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை நெற்பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக பெய்த கனமழையினால் திருவாரூர் மாவட்டத்தில் குறுவை நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இதனையடுத்து திருவாரூர் மாவட்ட வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கனமழையால் பாதிக்கப்பட்ட குறுவை சாகுபடி பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தினர். இந்த கணக்கெடுப்பில் 13,325 ஏக்கர் மாவட்டம் முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது தமிழக அரசு கனமழையால் பாதிக்கப்பட்ட குறுவை சாகுபடிக்கான நிவாரணத்தை அறிவித்துள்ளது. இதில் ஹெக்டேர் ஒன்றுக்கு 13,500 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் பதிக்கப்பட்ட 13,325 ஏக்கருக்கு 7.1 கோடி ரூபாய் நிவாரணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறுவை நெற்பயிர் சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் தமிழக முதல்வருக்கு விவசாயிகள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் ஒரு போக சம்பா சாகுபடி மற்றும் தாளடி சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் கடந்த ஒரிரு மாதத்திற்கு முன்பு வடகிழக்கு பருவமழை தீவிரத்தின் காரணமாக பெய்த மழையின் காரணமாக சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டு மூன்று முறை மீண்டும் மீண்டும் கனமழையின் காரணமாக விதைகள் அழுகியதால் தெளிப்பு பணிகளில் ஈடுபட்டதாகவும் எனவே சம்பா நெற்பயிருக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

செய்தியாளர் : ராஜசேகர் - திருவாரூர்

First published: