ஹோம் /நியூஸ் /திருவாரூர் /

நீச்சல் குளத்தில் குதூகலமாக விளையாடிய ‘பாப் கட்’ செங்கமலம் யானை.. கைதட்டி ரசித்த பொதுமக்கள்!

நீச்சல் குளத்தில் குதூகலமாக விளையாடிய ‘பாப் கட்’ செங்கமலம் யானை.. கைதட்டி ரசித்த பொதுமக்கள்!

நீச்சல் குளத்தில் விளையாடும் செங்கமலம் யானை

நீச்சல் குளத்தில் விளையாடும் செங்கமலம் யானை

sengamalam elephnat | செங்கமலம் யானைக்கென தமிழகத்தில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Mannargudi | Thiruvarur

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் யானை நீச்சல் குளத்தில் விளையாடிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் யானை செங்கமலத்திற்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நீச்சல் குளத்தை சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா நேற்று திறந்து வைத்தார்.

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கோயில் யானை செங்கமலம், அதன் பாப் கட்டிங் மூலம் தமிழகத்தில் பிரபலமடைந்தது. இந்த யானையின் தலை முடிக்காகவே பல ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதனால் செங்கமலத்துக்கு நேற்று ஒரு சிறப்பு பரிசாக தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் நீச்சல் குளம் ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளது.

அந்த நீச்சல் குளம் நேற்று சிறப்பு பூஜைகளுடன் திறப்பு விழா செய்யப்பட்டது. இதையடுத்து, குளத்திற்கு செங்கமலத்தை அழைத்து சென்றனர். அப்போது தன்னை மறந்த செங்கமலம் குழந்தையாக மாறி தண்ணீரை பீய்ச்சி அடித்து விளையாடி மகிழ்ந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் கைதட்டி மகிழ்ந்து யானையை ரசித்தனர்.

செய்தியாளர்: கு.ராஜசேகர், திருவாரூர்.

First published:

Tags: Elephant, Local News, Mannargudi, Thiruvarur