ஹோம் /நியூஸ் /திருவாரூர் /

லாரி டிரைவர்களை மிரட்டி செல்போன் பறிப்பு.. மன்னார்குடியில் 3 இளைஞர்கள் கைது

லாரி டிரைவர்களை மிரட்டி செல்போன் பறிப்பு.. மன்னார்குடியில் 3 இளைஞர்கள் கைது

கைதானவர்கள்

கைதானவர்கள்

Crime News : மன்னார்குடியில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை மன்னார்குடி போலீசார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mannargudi, India

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கர்ணாவூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து 2 லாரிகளில் காலி மதுபாட்டில்களை ஏற்றி வந்த லாரி ஓட்டுநர்கள் வெங்கடேஸ்வரன், பரத்குமார் இருவரும் மன்னார்குடி அருகே கருணாவூரில் உள்ள தனியார் மதுபான கடைக்கு மதுபாட்டில்களை கொண்டு வந்தனர்.

இதனைத்தொடர்ந்து மதுபாட்டில்களை இறக்கி வைத்த பின்னர் லாரி ஓட்டுநர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் கருணாவூரில் இருந்து மன்னார்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 நபர்கள் இருசக்கர வாகனத்தை வழிமறித்து வெங்கடேஸ்வரன், பரத்குமார் இருவரிடமும் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி உள்ளனர்.

மேலும் லாரி ஓட்டுனர்களிடமிருந்த செல்போன்களை மர்ம நபர்கள் இருவர் திருடி சென்றனர். இதுகுறித்து லாரி ஓட்டுநர்கள் மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சம்பவஇடத்திற்கு சென்ற மன்னார்குடி காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் சதாசிவம் ஆகியோர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டபோது அங்கிருந்த கமல், கேசவன், அர்ஜூனன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர் : ராஜசேகர் - திருவாரூர் 

First published:

Tags: Crime News, Local News, Tiruvarur