ஹோம் /நியூஸ் /Tiruvarur /

4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை... தனியார் கால்நடை ஊழியர் போக்சோவில் கைது 

4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை... தனியார் கால்நடை ஊழியர் போக்சோவில் கைது 

 சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபுதாஸ்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபுதாஸ்

Thiruvarur : நன்னிலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபுதாஸ் மீது, போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே 4ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் கால்நடை ஊழியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட வண்டாம்பாளை ஸ்ரீ சிவசக்தி நகரில் வசித்து வரும் சாமிநாதன் என்பவரின் மகன் 42 வயதான பிரபுதாஸ். இவர் கால்நடைகளுக்கு தனியார் செயற்கை முறை கருவூட்டல் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்தநிலையில், பிரபுதாஸ் பணிக்கு சென்ற பொழுது 4ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் தாய் நன்னிலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். இதனையடுத்து புகாரின் அடிப்படையில் பிரபுதாஸ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

அதே போன்று திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் அருகே உள்ள புனவாசல் கிராமத்தில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவரின் மகன் 25 வயதான கோபி வெல்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். ரைஸ்மில் கட்டுமான பணியில் வெல்டராக பணிபுரிய வெளியூரில் சென்று வேலை பார்த்து வந்த அவர் இரண்டு வார விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதியுள்ள 16 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி கோபி கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள அவர் மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

Must Read : மீன்பிடி தடைகாலம் முடிந்தது... உற்சாகமாக கடலுக்குச் சென்ற மீன்வர்கள்

இது தொடர்பாக பெண்ணின் தாயார் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கோபியை போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: POCSO case, Sexual harassment, Thiruvarur