ஹோம் /நியூஸ் /திருவாரூர் /

அக்கா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. மது போதையிலும் பொது நலம்... சேற்றில் புரண்டு போராட்டம் நடத்திய இளைஞர்

அக்கா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. மது போதையிலும் பொது நலம்... சேற்றில் புரண்டு போராட்டம் நடத்திய இளைஞர்

போராட்டம் நடத்திய போதை இளைஞர்

போராட்டம் நடத்திய போதை இளைஞர்

Tiruvarur District News : பால பணிகள் நடைபெறும் இடத்தில் தொடர் மழை காரணமாக விபத்துக்கள் ஏற்படுவதாக கூறி சேற்றில் படுத்து போராட்டம் நடத்திய போதை இளைஞர்.  

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கொல்லாபுரத்தில் இருந்து சங்கமங்கலம் செல்லும் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. மேலும், அந்த சாலையின் குறுக்கே வாய்க்கால் செல்வதால் அந்த வாய்க்காலுக்கான பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த  இடத்தில் வாய்க்காலுக்கு பாலம் கட்டும் பணி நடைபெறுவதாலும்  குறுகிய சாலையாக இருப்பதாலும் மழையின் காரணமாக அந்த இடம் சேரும் சகதியுமாக இருப்பதாலும் அந்த வழியாக கடந்து செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் காலையில் இருந்து வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : திருச்சியில் திருடன் என நினைத்து இளைஞரை வடமாநில தொழிலாளர்கள் அடித்து கொன்ற வழக்கில் திடீர் திருப்பம்

இந்நிலையில், அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மதுபோதையில் சேரும், சகதியுமான அந்த சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டம் ஒரு மணி நேரம் தொடர்ந்தததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும், சாலையின் இரு பக்கமும் இரு சக்கர வாகனங்களில் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மேலும் அந்த போதை இளைஞர் அங்கு ஸ்கூட்டியுடன் காத்திருந்த பெண்ணிடம் “அக்கா கொஞ்ச நேரம் பொறுத்து கொள்ளுங்கள்” என்று பேசுவதும், பிறகு கால் மேல் கால் போட்டு சேற்றில் படுத்து கொண்டு போராட்டம் செய்வதுமாக இருந்தார்.

அவர் “பாதையில்லை.. பாதையில்லை.. இந்த பாதை பாதை இல்லை.. வேணாங்க.. வேணாங்க.. இந்த பாதை வேணாங்க.. உயிர் தப்பிச்சு போயிடுங்க.. வேற வழியா போய்டுங்க..” என்று கைகூப்பி முழக்கம் எழுப்பியபடி நடு சாலையில் அமர்ந்து போராட்டம் நட்டத்தினார்.

இந்த போராட்டம் ஒரு மணி நேரம் வரை தொடர்ந்தது. காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தும் ஒரு மணி நேரம் வரை காவல்துறையினர் அந்த பகுதிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் :  ராஜசேகர் - திருவாரூர்  

First published:

Tags: Local News, Tiruvarur