திருவாரூர் மாவட்டத்தில் நெற்பயிர்களை நாவாய்ப் பூச்சி தாக்கி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவது குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி, திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நாவாய்ப்பூச்சியின் சேதாரம் நெற்பயிரின் அனைத்து வளர்ச்சி பருவத்திலும் காணமுடியும். நாவாய்ப்பூச்சியின் குஞ்சுகள் மற்றும் வளர்ந்த பூச்சிகள் கூட்டம் கூட்டமாக நெற்பயிரின் தண்ணீர் மட்டத்திற்கு சற்று மேலே உள்ள தண்டு பகுதியில் சாற்றை உறிஞ்சும் தன்மை உடையது.
இதன் மூலம் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி நாளடைவில் தீயில் கருகியது போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தும். இதன் சேதாரம் பயிரின் வளர்ச்சி பருவத்தில் இருக்கும்போது நடுக்குருத்து வாடிவிடும். பூக்கும் தருணத்தில் இருக்கும் பட்சத்தில் வென்கதிராக மாறிவிடும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதனை கட்டுப்படுத்த தாவர பூச்சிக்கொல்லியான 5 சதவீத வேப்பங்கொட்டை கரைசல் அதாவது 25 கிலோ வேப்பங்கொட்டையை ஒரு எக்டேருக்கு பயன்படுத்த வேண்டும். செயற்கை பூச்சிக்கொல்லியான மாலத்தியான் 50 ஈ.சி.500 மில்லி ஒரு எக்டேருக்கு தெளித்து கட்டுப்படுத்தலாம்.
Must Read : கிரக தோஷங்கள் நீங்க விழுப்புரத்தில் வழிபட வேண்டிய திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில் - சிறப்புகள் என்ன?
மேலும், விவரங்களுக்கு நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் துறை இணை பேராசிரியரை 9655277010 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Delta district crops, Local News, Thiruvarur