முகப்பு /செய்தி /திருவாரூர் / திருவாரூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 5ம் தேதி விடுமுறை அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 5ம் தேதி விடுமுறை அறிவிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

Tiruvarur District News : முத்துப்பேட்டை கந்தூரி விழாவை முன்னிட்டு டிசம்பர் 5ம் தேதி தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.   

  • 1-MIN READ
  • Last Updated :
  • Thiruvarur, India

புகழ்பெற்ற முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்கா கந்தூரி விழா நவம்பர் மாதம் 25ம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 8ம் தேதி வரை 14 தினங்கள் நடைபெற உள்ளது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சந்தனக்கூடு விழா டிசம்பர் மாதம் 4ம் தேதி நள்ளிரவு நடைபெற உள்ளது.

இந்த விழாவை காண தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான நபர்கள் முத்துப்பேட்டைக்கு வருகை தருவார்கள். இதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க : செல்போன் டிஸ்ப்ளே மாற்றுவதில் தகராறு... மதுபோதையில் கடை ஊழியரை தாக்கிய இளைஞர்கள்

இந்நிலையில், முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா டிசம்பர் மாதம் 4ம் தேதி நள்ளிரவு நடைபெற உள்ள நிலையில் அடுத்த நாள் 5ம் தேதி திங்கள்கிழமை திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

அதே நேரத்தில் மாவட்டத்தில் உள்ள கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள் போன்றவை அரசு அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்பட தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 5ம் தேதி திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு அதற்கு பதிலாக திருவாரூர் மாவட்டத்தில்  டிசம்பர் 10ம் தேதி அன்று சனிக்கிழமை பணி நாளாக அறிவித்தும் ஆணையிடப்பட்டுள்ளது.

செய்தியாளர் -  ராஜசேகர்

First published:

Tags: Holiday, Tiruvarur