ஹோம் /நியூஸ் /திருவாரூர் /

24 மணிநேரமும் பெட்டிக்கடையில் கிடைக்கும் அரசு மதுபானம்.. கண்டுகொள்ளாத காவல்துறை.!

24 மணிநேரமும் பெட்டிக்கடையில் கிடைக்கும் அரசு மதுபானம்.. கண்டுகொள்ளாத காவல்துறை.!

திருவாரூர் அரசு மதுபானம் பெட்டிகடையில் விற்பனை

திருவாரூர் அரசு மதுபானம் பெட்டிகடையில் விற்பனை

திருவாரூர் மாவட்டம் மலவராயநல்லூர் அருகே பெட்டிக்கடையில் 24 மணி நேரமும் அரசு மதுபானம் விற்பனை செய்யப்படும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thiruvarur, India

  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தட்டாங்கோவில் கிராமத்தில் படையப்பா என்பவர் பெட்டிக்கடை ஒன்று நடத்திவருகிறார். இந்த கடையில்  அரசு மதுபானங்கள் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவதாகவும் டாஸ்மாக்கில் 135 ரூபாய்க்கு விற்கப்படும் குவாட்டர் 200 ரூபாய்க்கும், கட்டிங் 100 ரூபாய்க்கும் இங்கு விற்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

  இந்த மது விற்பனையால் அந்த ஊராட்சி மட்டுமல்லாது அருகிலுள்ள திருராமேஸ்வரம், தென்கோவனூர் போன்ற ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களும் பெண்களும் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். இங்கு விடியற்காலையில் வரும் மதுப் பயிர்கள் மது குடித்துவிட்டு அங்கேயே சாலையில் விழுந்து கிடப்பதால் அந்த வழியாக பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள் முகம் சுழிக்கின்ற அவல நிலை உள்ளது.

  மேலும் காலை நேரத்தில் அங்கு மது அருந்தும் மதுப் பிரியர்களால்  பெண்கள் மற்றும் மாணவிகள் அந்த சாலையை கடந்து செல்ல முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

  இந்தப் பெட்டி கடையில் நடக்கும் மது விற்பனை காரணமாக திருராமேஸ்வரம், கோட்டகச்சேரி, கூப்பாச்சி கோட்டை, வாக்கோட்டை, தென்கோவனூர், வடகோவனூர் உள்ளிட்ட பல கிராம மக்கள் பாதிக்கப்படுவதாக கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்ததை அடுத்து தென்கோவனூர்  திருராமேஸ்வரம் ஆகிய இரு ஊராட்சி மன்ற தலைவர்கள் கிராம சபை கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் நிறைவேற்றினர்.

  Also see... தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

  அத்துடன் கோட்டூர் காவல் ஆய்வாளருக்கு கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி புகார் மனுவையும் அளித்துள்ளனர். இருப்பினும் இதுவரை காவல்துறையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்பகுதி இளைஞர் ஒருவர் இந்த கடையில் நடக்கும் மதுபான விற்பனை குறித்து எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

  செய்தியாளர்: கு.ராஜசேகர்,திருவாரூர்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Tasmac, Thiruvarur