ஹோம் /நியூஸ் /திருவாரூர் /

பெண் போலீஸ் அடித்ததால் அவமானம்... விஷம் குடித்து இளைஞர் தற்கொலை.. திருவாரூரில் பரபரப்பு

பெண் போலீஸ் அடித்ததால் அவமானம்... விஷம் குடித்து இளைஞர் தற்கொலை.. திருவாரூரில் பரபரப்பு

தற்கொலை செய்துகொண்ட ராகுல்ராஜ்

தற்கொலை செய்துகொண்ட ராகுல்ராஜ்

Tiruvarur District News : போலீசார் அடித்ததால் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தினர். 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Thiruvarur, India

  திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே  மடப்புரம் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜா. இவரது மனைவி மாதா, இவர்களது மகன் ராகுல்ராஜ்(22).

  இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவரின் 17 வயதுடைய மகளும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் குடும்பத்தினர் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

  இதுதொடர்பாக விசாரணைக்கு ராகுல்ராஜ் நேற்று அழைக்கப்பட்டார். விசாரணையின்போது போலீசார் ராகுல் ராஜை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ராகுல்ராஜ் விசாரணைக்கு பின்னர் நேற்று இரவு  வீட்டுக்கு வந்தார்.

  இதையும் படிங்க : செங்கல்பட்டில் சிறுத்தை நடமாட்டமா? - வீடியோ குறித்து வனத்துறை விளக்கம்!

  இந்நிலையில், தன்னை போலீசார் அடித்ததால் மனம் உடைந்து வீட்டில் இருந்த விஷ மருந்தை குடித்தார். தகவல் அறிந்த ராகுல்ராஜின் குடும்பத்தினர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ராகுல்ராஜை அழைத்து வந்து அனுமதித்தனர்.

  சிகிச்சையில் இருந்த ராகுல்ராஜ் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த அவரது உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் திருவாரூர் எஸ்.பி. அலுவலகத்திற்குள் புகுந்து நியாயம் கேட்டனர்.

  உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த திருவாரூர் டிஎஸ்பி மற்றும் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி திருவாரூர் தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

  அப்போது ராகுல்ராஜின் தந்தை ராஜா கொடுத்த புகாரில், அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகாலட்சுமி 20,000 ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில் ரூ.5,000 கொடுத்ததாகவும், அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டு ராகுல்ராஜையும் காவல் நிலையத்துக்கு விசாரணை என்ற பெயரில் அழைத்து வந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களும் அடித்து அவமானப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

  இந்நிலையில், அவமானம் தாங்க முடியாமல் தனது மகன் விஷம் அருந்தி இறந்துவிட்டார், இதற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் தான் காரணம் என தெரிவித்துள்ளார்.

  மேலும் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்தால் தான் உடலை வாங்குவோம் என கூறி தொடர்ந்து போராட்டத்தில் ராகுல்ராஜின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஈடுபட்டனர்.

  செய்தியாளர் : ராஜசேகர் - திருவாரூர்

  தற்கொலை தீர்வல்ல: மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

  Published by:Karthi K
  First published:

  Tags: Crime News, Tiruvarur