விடிய விடிய பெய்த கனமழையால் திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் பெருமளவு மழைநீரில் சாய்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இலங்கை பகுதியில் கரையை கடந்தது. தொடந்து அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததை அடுத்து கன்னியாகுமரி, நாகர்கோவில், தூத்துக்குடி போன்ற இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் டெல்டா மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் மழை என்பது படிப்படியாக குறையும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் நேற்று காலை முதல் திருவாரூர் மாவட்டத்தில் விட்டு விட்டு லேசான மழை பெய்து வந்தது. நேற்று இரவு முதல் தற்போது வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.குறிப்பாக திருவாரூர், சேந்தமங்கலம், மாங்குடி, வடகரை, வண்டம்பாலை, நன்னிலம், குடவாசல், மேரளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்து வருகிறது.
கடந்த மூன்று நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் சுமார் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிடப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி நெற் பயிர்கள் பெருமளவு மழைநீரில் சாய்ந்துள்ளன.
Read More : காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு.. மத்திய அமைச்சர் சொன்ன அப்டேட்..!
நேற்று காலையில் இருந்து மாலை வரை அதிக மழை இல்லாத காரணத்தினால் விவசாயிகள் நிம்மதி பெரு மூச்சுவிட்ட நிலையில் நேற்று இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக விவசாயிகள் மேலும் கலக்கமடைந்துள்ளனர். ஏற்கனவே மழை நீரில் சாய்ந்துள்ள நெற்பயிர்கள் தொடர் மழையின் காரணமாக நெல்மணிகள் வயலில் கொட்டி மீண்டும் முளைக்கக்கூடிய அவல நிலை ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஒரு ஏக்கருக்கு இருபதாயிரம் முதல் 25 ஆயிரம் முறை செலவு செய்து தற்பொழுது அறுவடை நேரத்தில் மழை பெய்து முழுவதுமாக எங்களது வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது என கூறுகின்றனர்.
மேலும் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று தெரியாமல் நாங்கள் திகைத்து நிற்கிறோம் என்றும், இந்த மழை நீரை வடிய வைத்தாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 22 சதவீதம் வரை கொள்முதல் செய்தால் மட்டுமே நாங்கள் இழப்பிலிருந்து தப்பிக்க முடியும். இல்லையென்றால் மிகப்பெரிய பொருளாதார இழப்பை நாங்கள் சந்திக்க நேரிடும். மேலும் விவசாய நிலத்தில் தேங்கியுள்ள மழை நீரை பம்பு செட் வைத்து இரைப்பதற்கான நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Farmers, Heavy rain, Thiruvarur