ஹோம் /நியூஸ் /திருவாரூர் /

பெண் கவுன்சிலரை ஆபாசமாக திட்டிய திமுக கவுன்சிலர் - ஆடியோ வெளியாகி பரபரப்பு

பெண் கவுன்சிலரை ஆபாசமாக திட்டிய திமுக கவுன்சிலர் - ஆடியோ வெளியாகி பரபரப்பு

பெண் கவுன்சிலரை ஆபாசமாக திட்டி திமுக கவுன்சிலர்

பெண் கவுன்சிலரை ஆபாசமாக திட்டி திமுக கவுன்சிலர்

குளம் தூர்வாரல் பணியை எம்எல்ஏ பார்வையிட வந்தபோது அத்தொகுதியின் கவுன்சிலர் கலைவாணிக்கு தெரிவிக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Mannargudi, India

  ஆபாசமாக திட்டிய திமுக கவுன்சிலரிடம், பதவியை ராஜினாமா செய்து கொள்கிறேன் என பெண் கவுன்சிலர் பேசும் ஆடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

  மன்னார்குடி நகராட்சி 29வது வார்டில் நடந்த குளம் தூர்வாரல் பணியை எம்எல்ஏ பார்வையிட வந்தபோது அத்தொகுதியின் கவுன்சிலர் கலைவாணிக்கு தெரிவிக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதுகுறித்து கலைவாணியின் கணவர் கார்த்திகேயன், கட்சிக்காரர்களிடம் ஆதங்கப்பட்டுள்ளார்.

  ' isDesktop="true" id="818492" youtubeid="8FYhfxYH4OQ" category="tiruvarur">

  இந்நிலையில், திமுக நகர செயலாளர் வீரகணேசனின் ஆதரவாளரும், 11-வது வார்டு கவுன்சிலருமான பாண்டவர், கார்த்திகேயனை செல்போனில் அழைத்துள்ளார். அந்த அழைப்பை கலைவாணி எடுக்க, அவரது கணவரை ஆபாசமான வார்த்தைகளில் திட்டியுள்ளார். ஒருகட்டத்தில் கலைவாணி, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து கொள்கிறேன் என்று சொல்லும் அளவிற்கு, கவுன்சிலர் பாண்டவர் ஆபாச வார்த்தைகளால் வசைபாடியுள்ளார்.

  Published by:Vijay R
  First published:

  Tags: DMK, Mannargudi