ஹோம் /நியூஸ் /திருவாரூர் /

திருவாரூரில் எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி தரவில்லை- மாவட்ட ஆட்சியர் விளக்கம்

திருவாரூரில் எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி தரவில்லை- மாவட்ட ஆட்சியர் விளக்கம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு புதிய கிணறுகள் அமைத்திட எந்த ஒரு அனுமதியும் வழங்கப்படவில்லை.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thiruvarur, India

  திருவாரூர் மாவட்டத்தில் புதிதாக எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி அளிக்கப்படவில்லை என்று மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.

  திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இப்பகுதிகளில்  புதிதாக எண்ணெய் எடுக்கும் பணிகள், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற பணிகளை மேற்கொள்ள அனுமதி கிடையாது.

  இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் தியானபுரம் அருகே ஏற்கனவே உரிமம் பெற்ற பகுதிகளில் புதிதாக எண்ணெய் கிணறு அமைக்க ஓஎன் ஜிசி நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியானது. இதையடுத்து, ஓஎன்ஜிசியின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்த கோரி ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பினர் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் .

  இந்நிலையில், புதிதாக எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி அளிக்கப்படவில்லை என்று மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருவாரூர் அருகே தியானபுரம் கிராமத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆம் ஆண்டு இரண்டு எண்ணெய் கிணறுகள் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

  மீண்டும் நேற்று எண்ணெய் கிணறு சிறு துறப்பின கருவிகள் மூலம் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் பழுது நீக்கம் பணிகளுக்காக மட்டுமே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய கிணறு அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு புதிய கிணறுகள் அமைத்திட எந்த ஒரு அனுமதியும் வழங்கப்படவில்லை.

  மேலும் ஓஎன்ஜிசி நிறுவனத்தினரால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு மட்டுமே எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Cauvery Delta, ONGC, Thiruvarur