ஹோம் /நியூஸ் /திருவாரூர் /

ஆளுக்கு ஒரு இலை... ஈபிஎஸ் - ஓபிஎஸ் சேர்ந்தாலும் வெற்றி பெற முடியாது - முத்தரசன்

ஆளுக்கு ஒரு இலை... ஈபிஎஸ் - ஓபிஎஸ் சேர்ந்தாலும் வெற்றி பெற முடியாது - முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்

CPI Mutharasan Press Meet | நாடு முழுவதும் அந்தந்த மாநிலங்களின் மொழிகளில் நீதிமன்றங்களில் தீர்ப்பை வாசிக்கலாம் என்று நீதிபதி கூறியிருப்பதற்கு முத்தரசன் வரவேற்பு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvarur, India

அதிமுகவில் ஒரு இலையை ஈபிஎஸ்ஸும், ஒரு இலையை ஓபிஎஸ்ஸும் எடுத்துக் கொண்டு நிற்பதாலும் தனித்தனியாக போட்டியிட்டாலும் ஒன்று சேர்ந்து போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், திமுக கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் ஈவிகேஎஸ் .இளங்கோவன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தாக இந்து சமய அறநிலையத்துறை ஒழிக்கப்படும் எனக் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வருவதாக அவர் தெரிவித்து இருப்பது இந்த ஆண்டின் முதல் நகைச்சுவை என தெரிவித்தார்.

ஏழை விவசாயிகள் எல்லாம் நிலத்தை அபகரித்துக் கொண்டார்கள் என்கின்ற குற்றத்தை சுமத்தி இந்து சமய அறநிலையத் துறையை ஒழித்து விடுவோம் என அண்ணாமலை கூறி வருவது கண்டனத்திற்குரியது என பேசியுள்ள முத்தரசன், நாடு முழுவதும் அந்தந்த மாநிலங்களின் மொழிகளில் நீதிமன்றங்களில் தீர்ப்பை வாசிக்கலாம் என்று நீதிபதி கூறியிருப்பது வரவேற்கத்தக்க ஒன்று என்றார்.

அதிமுகவில் ஒரு இலையை ஈபிஎஸ்ஸும், ஒரு இலையை ஓபிஎஸ்ஸும் எடுத்துக் கொண்டு நிற்கிறார்கள் இவர்கள் தனித்தனியாக போட்டியிட்டாலும் ஒன்று சேர்ந்து போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது என்று கூறிய அவர், இவர்கள் இருவருக்கும் இடையே பகையை ஏற்படுத்தி பாஜக அந்த தொகுதியில் தான் போட்டியிடுவதற்கு தயாராகி வருவதாக குற்றச்சாட்டு வைத்தார்.

அதிமுக அலுவலகத்தை நோக்கி பாஜக நடையாய் நடந்து கொண்டிருந்த சூழல் மாறி, பாஜக அலுவலகத்திற்கு அதிமுகவை சேர்ந்த இரு பிரிவினரும் நடையாய் நடப்பதாக அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.

செய்தியாளர்: ராஜசேகர்

First published:

Tags: CPI, Thiruvarur