திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்தி காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரப்பளவு கொண்ட காடாகும். இந்த காட்டின் அழகை ரசிக்க ஆண்டு முழுவதும் தமிழகம் மட்டுமன்றி இந்தியாவில் பல்வேறு பகுதியில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
மாண்டஸ் புயல் எதிரொலியாக கடந்த 9ஆம் தேதி முதல் மறுஅறிவிப்பு வரும் வரை முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதித்து வனத்துறை உத்தரவிட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பின்னர், கடந்த 18ஆம் தேதி முதல் மீண்டும் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அலையாத்தி காட்டிற்கு அழைத்து செல்லும் வனத்துறையின் ஜாம்புவானோடை படகு துறையில் திரண்ட சுற்றுலா பயணிகள், படகுகளில் ஏறி அலையாத்திக்காடுகளை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.
Must Read : மயிலாடுதுறை மாவட்டம் திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?
இந்நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று (22-12-2022) முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாக வனச்சரக அலுவலர் ஜனனி தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thiruvarur, Tourist spots