ஹோம் /நியூஸ் /Tiruvarur /

அம்மாவின் அடையாளமே.. தலைமையை ஏற்க வாருங்கள்.. ஓபிஎஸ்-க்கு ஆதரவாக மன்னார்குடியில் அதிமுகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

அம்மாவின் அடையாளமே.. தலைமையை ஏற்க வாருங்கள்.. ஓபிஎஸ்-க்கு ஆதரவாக மன்னார்குடியில் அதிமுகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

அதிமுக போஸ்டர்

அதிமுக போஸ்டர்

சசிகலா மற்றும் முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆகியோருடைய சொந்த ஊரான மன்னார்குடி பகுதியில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சசிகலாவின் சொந்த ஊரில் ஓ.பி.எஸ் தலைமை ஏற்க வலியுறுத்தி மன்னார்குடியில் அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

  அதிமுக செயற்குழு கூட்டம் சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற நிலையில் அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோருக்கு ஆதரவாக அவர் அவர்களுடைய ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். அதேநேரத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தனக்கு வேண்டப்பட்ட ஆதரவாளர்களுடன் நேற்று முதல் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

  Also Read:  அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு - இன்று விசாரணை

  இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ருக்மணி பாளையம்,  பேருந்து நிலையம், பந்தலடி மற்றும் மன்னார்குடி அருகே உள்ள உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்க்கு ஆதரவாக "அம்மாவின் அடையாளமே"  "நிகழ்கால பரதனே" ஒற்றை தலைமை ஏற்க வாருங்கள் ஐயா ஓபிஎஸ் என்ற வாசகத்துடன் திருவாரூர் மாவட்ட அதிமுக மன்னார்குடி ஒன்றியம் எனும் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. இதனால் மன்னார்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  இதனை அறிந்த அதிமுக தொண்டர்கள் மன்னார்குடி கடைத்தெரு பகுதியில் ஒட்டப்பட்டிருந்த ஒ.பி.எஸ்க்கு ஆதரவான போஸ்டர்களை கிழித்து அப்புறப்படுத்தினர்.சசிகலா மற்றும் முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆகியோருடைய சொந்த ஊரான மன்னார்குடி பகுதியில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

  செய்தியாளர்: செந்தில்குமரன் (திருவாரூர்)

  Published by:Ramprasath H
  First published:

  Tags: ADMK, OPS, OPS - EPS, Politics, Tamil News, Tiruvarur