ஹோம் /நியூஸ் /திருவாரூர் /

சிறையில் இருந்து ஜாமீனில் வந்தவர் வெட்டிப் படுகொலை.. பழிக்குப்பழி சம்பவமா? கூலிப்படையை ஏவியது யார்?

சிறையில் இருந்து ஜாமீனில் வந்தவர் வெட்டிப் படுகொலை.. பழிக்குப்பழி சம்பவமா? கூலிப்படையை ஏவியது யார்?

ஜாமீனில் வந்த இளைஞர் வெட்டிப் படுகொலை

ஜாமீனில் வந்த இளைஞர் வெட்டிப் படுகொலை

Thiruvarur district News : திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சிறையில் இருந்து ஜாமீனில் வந்து ஒருவாரம் ஆன நிலையில் இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 7 பேர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மணவாளநல்லூர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் சந்தோஷ் குமார் (வயது 25).  இவர் அடிதடி வழக்கில் 2 மாதம் சிறைவாசம் அனுபவித்து விட்டு ஒரு வாரத்திற்கு முன்பு பிணையில் வெளியே வந்திருந்தார்.

இந்நிலையில், சந்தோஷ்குமார் தனது வீட்டிலிருந்து கடைத்தெருவுக்கு நடந்து வந்து கொண்டிருந்த போது, கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த வந்த 14 பேர் கொண்ட மர்ம கும்பல் சந்தோஷ் குமாரை கடந்த ஜூன் மாதம் 19 ஆம் தேதி அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சந்தோஷ்குமாரின் தலையில் பலத்த வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சந்தோஷ் குமார் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மணவாளநல்லூர் திமுக ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் என்பவரை சந்தோஷ்குமார் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் படுகொலை செய்தது. இந்த கொலை வழக்கில் சந்தோஷ்குமார் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிறையில் இருந்து வந்து ஒரு வாரத்திற்குள் சந்தோஷ்குமார் கூலிப் படையினரால் கொலை செய்யப்பட்டிருப்பது இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன் கொலைக்கு பழிவாங்கும் விதமாக இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என்கிற கோணத்தில், எரவாஞ்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதனைத்து தொடர்ந்து, இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 13 நபர்கள் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

Must Read : தொழிலதிபர் மனைவி கழுத்து நெறித்து கொலை.. 30 சவரன் நகை பணம் மாயம் - திருப்பூரில் பயங்கரம்

இவர்களில் தற்போது பிரபாகரன் சாமிநாதன் விக்கி(எ)விக்னேஷ் ரமேஷ் குமார் வெங்கடேஷ் கணபதி பிரகாஷ் ஆகிய ஏழு நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் மூலம் கைது செய்து சிறையில் அடைக்க திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமாரின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

செய்தியாளர் - செந்தில்குமரன் .

First published:

Tags: Crime News, Murder, Thiruvarur