திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தாளடி நெற்பயிர் சாகுபடியிலும் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர் சாகுபடியிலும் விவசாயிகள் இந்த வருடம் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக வளிமண்டல கீழடுக்க சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை தொடக்கத்தின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது.
இதன் காரணமாக சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் விதைத்து 20 நாட்களே ஆன நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிப்புக்கு உள்ளானது. இந்த நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் தற்போது வரை தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது.
Also see... இடி மின்னல் வந்தால் தற்காத்துக்கொள்வது எப்படி?
இந்தத தொடர் மழையின் காரணமாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நிம்மேலி, கம்மங்குடி, குப்பம், சோத்திரியம், வடகுடி கிராமத்தில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கன மழை நீடிக்கும் பட்சத்தில் இந்த நெற்பயிர்கள் முற்றிலுமாக மழை நீர் வயல்களில் தேங்கி பயிர்கள் அழுகி பாதிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் குறிப்பாக இந்த பகுதியில் வயலில் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைப்பதற்கான வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படவில்லை என்றும் இதன் காரணமாக தண்ணீரை வடிய வைப்பதிலும் சிக்கல் நீடிப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இதுவரை ஏக்கர் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில் செலவு செய்த பணத்தை கூட எடுக்க முடியாத நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
செய்தியாளர்: கு.ராஜசேகர், திருவாரூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Heavy Rainfall, Paddy fields, Thiruvarur