Home /News /tiruvannamalai /

திருவண்ணாமலையில் காட்டெருமையை வேட்டையாடி வீட்டில் தோரணமாக தொங்கவிட்ட இளைஞர்கள்.. மிரண்டுபோன வனத்துறையினர்

திருவண்ணாமலையில் காட்டெருமையை வேட்டையாடி வீட்டில் தோரணமாக தொங்கவிட்ட இளைஞர்கள்.. மிரண்டுபோன வனத்துறையினர்

காட்டெருமையை வேட்டையாடி கறியை வீட்டில் தொங்கவிட்ட இளைஞர்கள்

காட்டெருமையை வேட்டையாடி கறியை வீட்டில் தொங்கவிட்ட இளைஞர்கள்

Tiruvannamalai | காட்டெருமையை வேட்டையாடி கறியை தோரணமாக தொங்கவிட்ட இருவரை வனத்துறையினை தேடி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai, India
    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தீத்தாண்டப்பட்டு இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ராமர் மற்றும் ஜெயபால் வனப்பகுதியில் காட்டெருமையை வேட்டையாடி கறியை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதை அடுத்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின்பேரில் வனச்சரக அலுவலர் ராமநாதன் தலைமையிலான வனத்துறையினர் இந்திரா நகர் பகுதியில் உள்ள அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர் .அப்பொழுது காட்டெருமை கறிதோரணமாக வீட்டில் தொங்கவிடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    Also see... மதுரை:காலாவதியான பரோட்டா, சிக்கன் பறிமுதல்;6 உணவகங்களுக்கு நோட்டீஸ் - உணவு பாதுகாப்பு துறை அதிரடி!

    இதனைத் தொடர்ந்து காட்டெருமை கறியை பறிமுதல் செய்தனர்.
    வனப்பகுதிக்குள் சென்று காட்டெருமையை  வேட்டையாடிய ராமர் மற்றும் ஜெயபால் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: அ.சதிஷ், திருவண்ணாமலை
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Forest Department, Thiruvannamalai

    அடுத்த செய்தி