ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

ஜவ்வாது மலை நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா.. நீரில் மூழ்கி இளைஞர் மரணம்

ஜவ்வாது மலை நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா.. நீரில் மூழ்கி இளைஞர் மரணம்

ஜவ்வாது மலை நீர்வீழ்ச்சி

ஜவ்வாது மலை நீர்வீழ்ச்சி

Chengam | செங்கம் அருகே ஜவ்வாது மலை புத்தூர் நீர்வீழ்ச்சியில் உறவினர்களுடன் குளிக்க வந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chengam, India

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஜவ்வாது மலையை ஒட்டி உள்ள குட்டூர் ஊராட்சி வனப்பகுதியில் உள்ளது புத்தூர் நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சிக்கு விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தனது உறவினர்களுடன் சுற்றுலா வந்த இளைஞர் நீர்வீழ்ச்சியில் மூழ்கி உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த யாசின் என்பவரது மகன் ஹாரிப். இவர் தனது உறவினர்களுடன் செங்கம் அடுத்த குட்டூர் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது  நீரில் மூழ்கி உறவினர்களின் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.  உறவினர்களின் கதறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பின்னர் செங்கம் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

Also see... அதிமுக உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு..

பின்னர் போலீசார் வந்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் பின்னர் வந்த தீயணைப்புத் துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு உடலை கண்டறிந்து வனத்துறை மற்றும் செங்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Dead, Falls, Thiruvannamalai