ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

செல்போன் கடைக்காரர் மீது தாக்குதல்... திருவண்ணாமலையில் கஞ்சா போதையில் இளைஞர் அட்டகாசம்

செல்போன் கடைக்காரர் மீது தாக்குதல்... திருவண்ணாமலையில் கஞ்சா போதையில் இளைஞர் அட்டகாசம்

கஞ்சா போதையில் அட்டகாசத்தில் ஈடுபட்ட வாலிபர்

கஞ்சா போதையில் அட்டகாசத்தில் ஈடுபட்ட வாலிபர்

Tiruvannamalai News : கஞ்சா போதையில் செல்போன் கடைக்காரரை தாக்கிய இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruvannamalai, India

  திருவண்ணாமலை புது வானியங்குள தெருவை சேர்ந்தவர் மணி. இவர் இன்று கஞ்சா போதையில் மக்கள் அதிக அளவு நடமாடும் திருவண்ணாமலை சின்ன கடை தெருவில் உள்ள செல்போன் கடைக்கு சென்றுள்ளார். பின்னர் செல்போன் வாங்குவது போல கடைக்காரரிடம் ஒரு செல்போனை வாங்கி பார்த்துள்ளார்.

  அப்போது, திடீரென அந்த செல்போனை கீழே போட்டு உடைத்ததுடன்  தொடர்ந்து கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துடன் செல்போன் கடைக்காரரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் செல்போன்  கடைக்காரர் கூச்சலிட்டதை தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு போதையில் இருந்த இளைஞரை சாரமாரியக தாக்கினர்.

  இதையும் படிங்க : பெண்கள் கழிவறையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்.. மக்கள் கூடும் பூங்காவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

  பின்னர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரை பிடிக்க முயற்சித்தனர்.

  அப்போது காவல்துறையினரை போதையில் இருந்த இளைஞர் சரமாரியாக திட்டினார். இதற்கு காவல்துறையினர் செய்வது அறியாது  நின்றனர். தொடர்ந்து போதையில் உள்ள நபரை காவல் துறையினர் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கஞ்சா போதையில் பொதுமக்கள் அதிகம் நடமாடக்கூடிய சின்னக்கடை வீதியில் போதை ஆசாமி ரகளையில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  தற்போது கஞ்சா போதையில் செல்போன் கடைக்காரரை தாக்கியதுடன் செல்போன் மற்றும் கடையில் இருந்த பொருட்களை சூறையாடிய மேலும் பல்வேறு நபர்கள் குறித்து சிசிடிவி காட்சிகள் மூலம் தீவிரமாக காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

  செய்தியாளர் : சதிஷ் - திருவண்ணாமலை

  Published by:Karthi K
  First published:

  Tags: Crime News, Tiruvannamalai