திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் நாய்கள் கடித்து குதறியதால் இறந்த குட்டி குரங்கிற்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, அப்பகுதி இளைஞர்கள் அடக்கம் செய்தனர்.
குரங்கை அனுமனாக வழிபடும் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. ராம பக்தரான ஆஞ்சநேயர், சக்திவாய்ந்த தெய்வமாகப் பார்க்கப்படுகிறது. இதனால், பொதுவாக மக்கள் குரங்குகளை துன்புறுத்துவதில்லை. மாறாக வழிபட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சிலர் குரங்குகளுக்கு உணவளித்தும் மகிழ்கின்றனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ராகவா நகரில் தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து குரங்கு குட்டி ஒன்றை கடித்து குதறியது. இதனைக் கண்டு அப்பகுதி மக்கள் தெரு நாய்களிடமிருந்து அக்குரங்கை காப்பாற்றினர். ஆனால் காப்பாற்றிய சில மணி நேரத்தில் அந்த குட்டி குரங்கு பரிதாபமாக உயிரிழந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குரங்கை அடக்கம் செய்த இளைஞர்கள்
இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சுகுமார் தலைமையில் ஒன்று சேர்ந்து, ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் திருக்கோவில் அடிவாரத்தில் உள்ள ஓம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் அருகில் இறந்து போன குட்டி குரங்கிற்கு, பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களை நடத்தினர்.
Must Read : தமிழ்நாடு U-19 கிரிக்கெட் அணியின் கேப்டனாக கோவை காருண்யா பல்கலைக்கழக மாணவர் தேர்வு
பின்னர் மந்திரங்கள் முழங்க குட்டி குரங்கை மலையடிவாரத்தில் சிறப்பு பூஜைகள் செய்து அடக்கம் செய்தனர். இறந்து போன குட்டி குரங்கிற்கு அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிறப்பு பூஜைகள் செய்து அடக்கம் செய்தது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
செய்தியாளர் - அ.சதிஷ், திருவண்ணாமலை.
உங்கள் நகரத்திலிருந்து(திருவண்ணாமலை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.