முகப்பு /செய்தி /திருவண்ணாமலை / திருவண்ணாமலை : சிறந்த ஊராட்சி மன்ற தலைவருக்கான விருதை இளம் வயதில் வென்ற பெண்.. பொதுமக்கள் பாராட்டு..

திருவண்ணாமலை : சிறந்த ஊராட்சி மன்ற தலைவருக்கான விருதை இளம் வயதில் வென்ற பெண்.. பொதுமக்கள் பாராட்டு..

நந்தினி கண்ணன்

நந்தினி கண்ணன்

Tiruvannamalai News : ஆரணி அருகே இளம் வயதான பெண் ஊராட்சி மன்ற தலைவருக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சிறந்த ஊராட்சி தலைவர் என்று குடியரசு தின விழாவில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Arani (Arni), India

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புதுப்பாளையம் ஊராட்சியில் 2020ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் 29 வயதான நந்தினி கண்ணன் என்ற பெண் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முதுகலைப் பட்டம் பெற்றவர். மேலும் புதுப்பாளையம் கிராமத்தில் தனக்கு கொடுத்த ஊராட்சி மன்ற தலைவர் பதவியை சரியாக செய்து வருகிறார். மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் ஜில்ஜீவன் திட்டம் மற்றும் மாநில அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், சாலை திட்டம், கழிவறை பக்க கால்வாய் போன்ற பல்வேறு திட்டங்களை சிறப்பாக செய்து வந்துள்ளார்.

மேலும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று உடனடியாக அதற்கு தீர்வளிக்கும் வகையில் செயல்பட்டும் வந்துள்ளார். இதற்காக ஆரணி ஒன்றியத்தில் உள்ள 38 பஞ்சாயத்துகளில் புதுப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி கண்ணன் சிறந்த தலைவர் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேசுக்கு ஆரணி மேற்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மத்திய மற்றும் மாநில அரசல் கொண்டுவரப்பட்ட திட்டங்களை முழுமையாக புதுப்பாளையம் கிராமத்திற்கு கொண்டு சென்ற ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி கண்ணனுக்கு சிறந்த ஊராட்சி மன்ற தலைவர் என்று சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி கண்ணன், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் மக்களுக்காக உழைத்துகொண்டிருக்கிறேன். நான் பெற்ற இந்த கேடயம் மற்றும் சான்றிதழ் அனைத்து பெருமையும் என்னை தேர்ந்தெடுத்த பொதுமக்களையே சேரும்” என்று தெரிவித்தார். இளம் வயதில் ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பு ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல்பட்ட சிறந்த ஊராட்சி மன்ற தலைவர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஆரணி பகுதியில் உள்ள பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி கண்ணனை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

செய்தியாளர் : மோகன்ராஜ் - ஆரணி

First published:

Tags: Arani, Local News, Tamil News, Tiruvannamalai