Home /News /tiruvannamalai /

நாத்திகரான கலைஞரின் சிலை கிரிவலப் பாதையில் எதற்கு?.. எச்.ராஜா காட்டம்..

நாத்திகரான கலைஞரின் சிலை கிரிவலப் பாதையில் எதற்கு?.. எச்.ராஜா காட்டம்..

எச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பு

எச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பு

BJP H RAJA | பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா திருவண்ணாமலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறக்க உள்ள கலைஞரின் திருவுருவ சிலையை ஆய்வு செய்தார்.

    திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவ சிலை அமைக்க எச். ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். ‘ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்தவர் கலைஞர்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதால் எச்.ராஜா ஆத்திரமடைந்து செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் வருகிற 8 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திருக்கரங்களால் 9 அடி உயர கலைஞரின் வெண்கல சிலையை திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அருகே உள்ள சிவான்ஜி குளத்தில் அமைந்துள்ள சிவன் கோவிலின் இடம் ஆக்கிரமிப்பு குறித்து கோவிலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா பேசுகையில்,
    லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வரக்கூடிய கிரிவலப் பாதையில் நாத்திகரான கலைஞர் கருணாநிதியின் சிலை வைப்பதற்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறினார். இதுகுறித்து இந்து அமைப்புகளை கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதேபோல் அண்ணா நுழைவாயில் என்ற பெயரை நீக்கிவிட்டு அண்ணாமலையார் நுழைவாயில் என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    Also Read : அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

    இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்தவர் நாத்திகரான கருணாநிதி தானே என கேள்வி எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த எச். ராஜா நீங்கள் அறிவாலயத்து செய்தியாளரா? என விமர்சனம் செய்து செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    ராகுல் காந்தி எடப்பாடியிடம் பேசியது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பாஜக சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு அதிமுக, பாமக, மாயாவதியின் பகுஜன் சமாஜ், ஜெகன்மோகன் ரெட்டி என பல்வேறு கட்சிகளின் ஆதரவு உள்ளதால் கூட்டணி கட்சி வாக்கை விட ஒன்றரை மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.

    கிரிவலப் பாதையில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான இடங்களை தனியார் அமைப்புகள் ஆக்கிரமித்து வணிக வளாகங்கள் கட்டிடம் கட்டி உள்ளதாகவும் இதனை உடனடியாக மீட்க வேண்டும் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபுக்கு எச்.ராஜா கோரிக்கை விடுத்தார்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: BJP, CM MK Stalin, DMK, H.raja bjp, Karunanidhi statue, Thiruvannamalai

    அடுத்த செய்தி