ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

அத்தியாவசிய பொருட்களை வாங்க கிராமமே ஒன்று திரண்டு செல்கிறது - என்ன காரணம்?

அத்தியாவசிய பொருட்களை வாங்க கிராமமே ஒன்று திரண்டு செல்கிறது - என்ன காரணம்?

கிராமத்தின் அவல நிலை

கிராமத்தின் அவல நிலை

Village Road Issue | தனியாக சென்ற பொதுமக்கள் காட்டாறில் அடித்து செல்லப்படுவதாகவும் கிராமத்தினர் தெரிவித்தனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Arani (Arni), India

  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஜமுனாமுத்தூர் அடுத்த பெலாமரத்தூர் ஊராட்சிக்குட்பட்ட சாரமந்தை, பதரி, நாச்சமலை, கூத்தனேரி, சின்ன கூத்தனேரி, புளித்தகோட்டை, வாளகாடு உள்ளிட்ட சுமார் 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

  இங்கு சுமார் 35000க்கும் மேற்பட்ட பொமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் விவசாயம் மற்றும் கூலி தொழில் முக்கிய தொழிலாக உள்ளது. மேலும் இந்த கிராமத்தில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மளிகைப்பொருட்கள், காய்கறி, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு இந்த பகுதி அருகே சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஜமுனாமுத்தூர் சென்று வாங்கி வரவேண்டும்.

  ஆனால் சாலைகள் குண்டும், குழியுமாக கரடுமுரடான பாதையாகவும், 5 காட்டாறுகளை கடந்து சென்று மீண்டும் சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் வரவேண்டிய சூழ்நிலையில் உள்ளது. மேலும் இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இந்த பகுதியில் இதுவரையில் சாலைகள் செய்து தரவில்லை.

  இதையும் படிங்க : நாளை ரெட் அலெர்ட்.. தொடங்கியது கனமழை.. 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

  இதனால் இப்பகுதி பொதுமக்கள் பொருட்களை வாங்குவதற்கு கிராமமே ஓன்று திரண்டு வாரம் ஓருமுறை ஜமுனாமுத்தூர் சென்று வாங்கி வர வேண்டிய அவலநிலை உள்ளது. தமிழகத்தில் இருந்தும் தனி தீவு போல் கருதுவதாக கிராம பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

  மேலும் சின்னகூத்தநரி, புளித்தகோட்டை, வாளமந்தை உள்ளிட்ட கிராமத்திலிருந்து பள்ளிக்கு செல்ல வாளக்காடு கிராமத்திற்கு குண்டும், குழியுமான சாலையில் நடந்தே சென்று படிக்கும் அவலமும் ஏற்படுகின்றன.

  காட்டாறை ஆபத்தாக கடக்கின்றனர்

  இதுமட்டுமின்றி உயர்நிலைபள்ளி படிக்க வேண்டும் என்றால் 15 கிலோ மீட்டர் தூரம் இருக்கக்கூடிய ஜமுனாமுத்தூர் கிராமத்திற்கு தினமும் 30 கிலோ மீட்டர் தூரம் கால்நடையாக நடந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், 5 காட்டாறுகளை கடந்து செல்ல கூடிய நிலைமை ஏற்படுவதால் கிராமத்தில் உள்ள மாணவர்கள் உயர்நிலை படிப்பை புறக்கணிக்கபடுவதாக தெரிவிக்கின்றனர்.

  மேலும் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் சாலைகள் சேரும், சகதியுமாக நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் குழந்தைகளை பெற்றோர்கள் தோலில் சுமந்து சென்று பள்ளிக்கு அனுப்பி மீண்டும் தோலில் சுமந்து வீட்டிற்கு வரவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

  மழை காலங்களில் தனியாக செல்ல அச்சப்படுவதாகவும், இதுபோல் தனியாக சென்ற பொதுமக்கள் காட்டாறில் அடித்து செல்லப்படுவதாகவும் கிராமத்தினர் தெரிவித்தனர். கர்ப்பிணி பெண்களை தோலில் சுமந்து செல்லும் அவலநிலையும் ஏற்படுகின்றன.

  மேலும் இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் முடிவடைந்து செல்போன் வாட்ஸ்-அப் என்ற டிஜிட்டல் என பல்வேறு வகையில் உயர்ந்தாலும் பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் பொருட்களை வாங்குவதற்கு தனி தீவில் போல் தமிழகத்திலேயே கிராம பொதுமக்கள் வசித்து வருவதாக கிராம பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

  எனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பகுதிக்கு சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க கோரி கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  செய்தியாளர் : மோகன்ராஜ் - ஆரணி

  Published by:Karthi K
  First published:

  Tags: CM MK Stalin, Tiruvannamalai