ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

பட்டா மாற்றுவதற்கு ரூ.25,000 லஞ்சம்... கையும் களவுமாக சிக்கிய கிராம நிர்வாக அலுவலர்!

பட்டா மாற்றுவதற்கு ரூ.25,000 லஞ்சம்... கையும் களவுமாக சிக்கிய கிராம நிர்வாக அலுவலர்!

வந்தவாசி கிராம நிர்வாக அலுவலர் கைது

வந்தவாசி கிராம நிர்வாக அலுவலர் கைது

Vandavasi Vigilance | ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுக்க சொல்லி கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கையும், களவுமாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Vandavasi | Tiruvannamalai

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பட்டா மாற்றம் செய்வதற்கு 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

வந்தவாசி அடுத்த புலிவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லம்மாள். இவருடைய 36 சென்ட் விவசாய நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்வதற்கு பலமுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டு இருந்த நிலையில் இவருடைய 36 சென்ட் நிலம் இவருடைய உறவினரான உண்ணாமலை என்பவரின் பெயரில் மாற்றப்பட்டது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த எல்லம்மாள் தென்னாங்கூர் கிராம நிர்வாக அலுவலர் தனபாலிடம் தெரிவித்தார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் தனபால் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பட்டா மாற்றம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் மன வேதனை அடைந்த எல்லம்மாள் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி வேல்முருகன் தலைமையில் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன தடவிய ரூபாய் நோட்டுகளை எல்லம்மாளிடம் கொடுத்து அனுப்பி வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் முகாமிட்டனர். அப்போது எல்லம்மாள் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் தனபாலிடம் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் தனபாலை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

செய்தியாளர்: ம.மோகன்ராஜ், ஆரணி.

First published:

Tags: Corruption, Local News, Tiruvannamalai, Vigilance officers