ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

அண்ணாமலையார் கோயிலில் ஆனந்த தாண்டவம் ஆடிய வெளிநாட்டு பக்தர்... கண்டு ரசித்த மக்கள்!

அண்ணாமலையார் கோயிலில் ஆனந்த தாண்டவம் ஆடிய வெளிநாட்டு பக்தர்... கண்டு ரசித்த மக்கள்!

நடனமாடிய வெளிநாட்டு பெண்

நடனமாடிய வெளிநாட்டு பெண்

Tiruvannamalai foreign devotee dance | துருக்கி நாட்டை சேர்ந்த பெண்மணி அண்ணாமலையார் சன்னதியில் ஆன்மீக பாடலுக்கு ஆனந்த தாண்டவமாடினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai | Tiruvannamalai

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆனந்த தாண்டவம் ஆடிய வெளிநாட்டை சேர்ந்த பக்தரை பலரும் மெய்மறந்து ரசித்தனர்.

உலக பிரசித்திப்பெற்ற திருத்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலிலுக்கு வெளிநாடு, வெளிமாநிலம்,வெளியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து  தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

விடுமுறை நாளான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கடந்த சில நாட்களாகவே ஐய்யப்ப பக்தர்கள், மேல்மருவத்தூர் பக்தர்களின் வருகையால் அண்ணாமலையார் கோவிலில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகரித்தே தான் காணப்படுகிறது.

இந்நிலையில் அண்ணாமலையாரை தரிசிக்க வந்த துருக்கி நாட்டை சேர்ந்த  மேர்வீன், செமி தம்மதியினர் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரகாரத்தை சுற்றிவந்தனர். பின்னர் கோயில் உட்பிரகாரத்தில் அண்ணாமலையார் சன்னதி முன்பு மேர்வின் திடீரென ஆன்மீக பாடலுக்கு நடனமாடினார். இதனை அவரது கணவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். இதனை கண்ட பக்தர்கள் வெளிநாட்டு பெண் நடனமாடுவதை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

First published:

Tags: Dance, Devotional Songs, Local News, Tiruvannamalai