ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: 30 லட்சம் பக்தர்கள்.. 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: 30 லட்சம் பக்தர்கள்.. 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்!

சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் சென்று வர ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

 • Local18
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruvannamalai, India

  திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக, டிசம்பர் 6ம் தேதி மகாதீப பெருவிழா நடைபெற உள்ளது. தீபத்திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வருவது வழக்கம்.

  அதனால் பொதுமக்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2700 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது. வருகின்ற டிசம்பர் 6-ம் தேதி மட்டும் 25 லட்சம் பக்தர்களும், மகா தேரோட்டத்தின் போது 5 லட்சம் பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  அத்துடன் டிசம்பர் 7ம் தேதி பொளர்ணமியும் உள்ளது. அதனால் போக்குவரத்துறை சிறப்பு பேருந்துகளை டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இயக்க திட்டமிட்டுள்ளது. மேலும் பொதுமக்களின் வருகையை பொருத்து பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Also see... 1000 தூண்கள் கொண்ட அண்ணாமலையார் திருக்கோவில் 1000 கால் மண்டபம் - பக்தர்கள் பயன்பாட்டுக்கு இன்று திறப்பு

  அதனை தொடர்ந்து பக்தர்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், கழிப்பிடம், உணவு போன்றவற்றிக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அன்னதானம் அளிக்க விரும்புவோர் மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கும் இடங்கள் மற்றும் சொந்த இடங்களில் மட்டுமே அன்னதானம் செய்ய வேண்டும். இதற்கு வரும் நவம்பர் 26 ஆம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Karthigai Deepam, Local News, Thiruvannamalai