முகப்பு /செய்தி /திருவண்ணாமலை / தாடியுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்... ஆசிரியர்கள் எடுத்த அதிரடி நடவடிக்கை!

தாடியுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்... ஆசிரியர்கள் எடுத்த அதிரடி நடவடிக்கை!

ஷேவிங் செய்துகொள்ளும் மாணவர்கள்

ஷேவிங் செய்துகொள்ளும் மாணவர்கள்

Tiruvannamalai News : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பள்ளிக்கு தாடியுடன் வந்த மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruvannamalai, India

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை மைதானம் எதிரே உள்ள ஆரணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பள்ளி சீருடையில் 3 மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் முகத்தில் ஷேவிங் செய்து கொண்டிந்தனர். அப்போது அந்த மாணவர்களிடம் அங்கிருந்த சமூக ஆர்லர்கள் மற்றும் பொதுமக்கள்  இதுகுறித்து விசாரித்தனர். அப்போது அந்த மாணவர்கள் கூறுகையில், “நாங்கள் ஆரணி டவுன் கோட்டை மைதானம் எதிரே உள்ள அரசு உதவி பெறும் சுப்பிரமணி சாஸ்திரியர் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறோம்.

தற்போது எங்களுக்கு செய்முறை தேர்வு நடந்து வருகிறது. நாங்கள் ஸ்டைலாக தாடி வளர்த்து வந்தோம். இதனால் முகத்தில் தாடியுடன் பள்ளிக்கு வந்த எங்களை ஆசிரியர்கள் எங்களது முகத்தில் சேவ் செய்துகொண்டு பள்ளி ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். மாறாக தாடியுடன் வந்தால் எங்களின் இண்டர்னல் மார்க் கிடைக்காது என்று கூறினர். இதைக்கேட்டு நாங்கள் அதிர்ச்சியடைத்தோம். இதனால் வேறு வழியின்றி நாங்கள் ஆரணி சட்டமன்ற அலுவலக வளாகத்தில் நாங்கள் எங்களுக்குள் மாறி மாறி ஷேவிங் செய்துகொண்டோம்” என தெரிவித்ததனர்.

மேலும், கல்வி தரத்தை உயர்த்த மாணவர்களிடையே விழிப்புணவு ஏற்படுத்தபட்டுள்ளன. பள்ளிக் கல்வித் துறை மாணவர்கள் ஒழுக்கத்தை பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் கண்காணித்து முறையாக நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்ககோரியும் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

செய்தியாளர் : மோகன்ராஜ் - ஆரணி

First published:

Tags: Local News, Tiruvannamalai