ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

கொலை வழக்கிலிருந்து தப்பிக்க விபத்தில் இறந்ததாக நாடகம்... சினிமாவை மிஞ்சும் திட்டம் அம்பலமானது எப்படி?

கொலை வழக்கிலிருந்து தப்பிக்க விபத்தில் இறந்ததாக நாடகம்... சினிமாவை மிஞ்சும் திட்டம் அம்பலமானது எப்படி?

மணிகண்டன்

மணிகண்டன்

பாபநாசம்.. பாஷா.. என இரண்டு படங்களையும் இன்ஸ்பிரேஷனாக எடுத்து, கொலை வழக்கிலிருந்து தப்பிக்க நினைத்த கில்லாடி குற்றவாளி போலீசாரிடம் வசமாக சிக்கினார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tiruvannamalai, India

  திருவண்ணாமலை மாவட்டத்தில் விபத்தில் இறந்ததாக நாடகமாடி கொலை வழக்கிலிருந்து தப்பிக்க நினைத்த கில்லாடி குற்றவாளி சிக்கியுள்ளார். பாபநாசம் படத்திற்கே டஃப் கொடுக்கும் குற்றவாளியின் திட்டம் அம்பலமானது எப்படி?

  திருவண்ணாமலை அடுத்த மேல் பாலானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் 33 வயதான மணிகண்டன். அதே கிராமத்தில் செங்கல் சூளை வைத்து நடத்தி வந்தார். இவர் தனது தொழிலை மேம்படுத்துவதற்காக கிராமத்தில் பலரிடம் கடன் பெற்றுள்ளார்.

  இருப்பினும் இவரது தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் செய்வதறியாது தவித்த மணிகண்டன், ஆட்கடத்தலில் செய்து பணம் கேட்கலாம் என திட்டம் தீட்டியுள்ளார். தனது திட்டத்தின்படி பக்கத்து வீட்டில் வசித்து வந்த 5 வயது சிறுமியை கடத்தி குடும்பத்தாரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

  இதுகுறித்து சிறுமியின் தந்தை மங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் சிறுமியை கொலை செய்து, கிணற்றில் வீசி விட்டு தப்பியோடியுள்ளார்.

  இதனையடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய மங்கலம் போலீசார், பதுங்கியிருந்த மணிகண்டனை சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் மணிகண்டனுக்கு திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்தது.

  தீர்ப்புக்கு எதிராக மணிகண்டன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், வழக்கில் நிறைய குளறுபடி உள்ளதாகக் கூறி, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. 6 மாதத்திற்கு பிறகு மணிகண்டன் ஜாமினில் வெளியே வந்தார். திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது.

  மங்களூரு குண்டுவெடிப்பு: லாட்ஜ் பக்கத்து ரூமில் ஸ்கூல் டீச்சர்.. நைசாக பேசி ஆதாரை வாங்கிய ஷாரிக்.. பரபரப்பு தகவல்கள்! 

  இந்நிலையில், சிபிஐ விசாரணையும் மணிகண்டனுக்கு எதிராக சென்றதால் வழக்கிலிருந்து தப்பிக்க மணிகண்டன் பெரும் திட்டம் ஒன்றைத் தீட்டினர். அதன்படி விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக நாடகமாடி தலைமறைவாவது எப்படி என்பது குறித்து யூடிப்பில் தேடியுள்ளார் மணிகண்டன்.

  பாட்ஷா, பாபநாசம் என பல்வேறு படங்களிலிருந்து காட்சிகளை உருவி ஒரு புது திட்டத்தை உருவாக்கினார். அதன்படி அக்டோபர் 29ம் தேதி தனது கிராமத்தில் அனைவரிடமும் சகஜமாக பேசி பழகிவிட்டு மங்கலம் பகுதியில் உள்ள தியேட்டருக்கு படம் பார்க்கச் சென்றார்.

  யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க தியேட்டர் டிக்கெட் கொடுப்பவர் முதல் பாப்கான் விற்பவர் வரை அனைவரிடமும் பேசிவிட்ட தான் தியேட்டரில் இருப்பது போல் காட்டிக் கொண்டார். பின்னர் பாப்கார்னை வாங்கிக் கொண்டு திட்டமிட்டப்படி தியேட்டரை விட்டு வெளியேறினார்.

  மருத்துவமனையில் பணியாற்றும் தனது நண்பர் சத்யராஜ் என்பவர் மூலம் ஏற்கெனவே தனது உடலில் இருந்து 400 மில்லி ரத்தத்தை எடுத்து வைத்திருந்த மணிகண்டன், இருச்சக்கரவாகனத்தில் பாலனந்தல் பகுதிக்கு சென்றுள்ளார்.

  அங்கு ஆள்அரவமற்ற பகுதியில் தனது வாகனம் விபத்தில் சிக்கியது போல் செட்டப் செய்து விட்டு, கையில் கொண்டு சென்ற ரத்தத்தை பல்வேறு இடங்களில் ஊற்றியுள்ளார். பின் அருகில் இருந்த வைக்கோல் போரை தீ வைத்து கொளுத்தி விட்டு தனது செல்போன், வாட்ஜ், பர்ஸ் உள்ளிட்டவற்றை தீயில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

  பெண் போலீஸ் அடித்ததால் அவமானம்... விஷம் குடித்து இளைஞர் தற்கொலை.. திருவாரூரில் பரபரப்பு 

  மறுநாள் அக்டோபர் 30-ம் தேதி மங்கலம் போலீசார் மணிகண்டனின் மனைவி ஷர்மிளாவை அழைத்துச் சென்று சம்பவ இடத்தில் அடையாளம் காட்டச் செய்தனர். ஆனால் அந்த இடத்தில் மனித உடலோ, எலும்புக்கூடுகளோ கிடைக்காததால் சந்தேகம் அடைந்த போலீசார் தனிப்படை அமைத்து கடந்த 15 நாட்களாக தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

  மணிகண்டன் தண்டனைக்கு பயந்து ஆரணியில் உள்ள உறவினர் சரத்குமார் வீட்டில் பதுங்கியிருப்பதாக் கிடைத்தது. ரகசியத் தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் மணிகண்டனை சுற்றி வளைத்துப் பிடித்தனர். மேலும் மணிகண்டனுக்கு உடந்தையாக இருந்த சரத்குமார், சத்தியராஜ், பாண்டியராஜ் ஆகியோரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  திரைப்பட பாணியில் திட்டம் தீட்டி கொலைக் குற்றத்திலிருந்து தப்பிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Crime News, Murder case, Tiruvannamalai