ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

திருவண்ணாமலையில் இன்றுடன் நிறைவடையும் கார்த்திகை தீபம்.. பக்தர்கள் தரிசனம்!

திருவண்ணாமலையில் இன்றுடன் நிறைவடையும் கார்த்திகை தீபம்.. பக்தர்கள் தரிசனம்!

இன்றுடன் நிறைவு பெற்றது திருவண்ணாமலையின் கார்த்திகை தீபத் திருவிழா...

இன்றுடன் நிறைவு பெற்றது திருவண்ணாமலையின் கார்த்திகை தீபத் திருவிழா...

karthigai deepam festival 2022 | இன்றுடன் மகாதீபம் நிறைவு பெற உள்ள நிலையில் நகரமே மின் ஒளியில் மின்ன 2668 அடி உயரம் கொண்ட தீப மலையில் மகாதீபமாக காட்சியளித்த அண்ணாமலையார்

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai, India

திருவண்ணாமலையில் மகாதீபம் இன்று நிறைவு பெற உள்ள நிலையில், மலை உச்சியில் ஏராளமான பக்தர்கள் தீப தரிசனம் மேற்கொண்டனர்.

நினைத்தாலே முக்தி தரும் தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலையில் கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை திருக்கோவில் கருவறையின் முன்பு 4 மணிக்கு பரணி தீபமும் அதனை தொடர்ந்து அன்று மாலை திருக்கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட தீபம் மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது.

டிசம்பர் 6-ம்  தேதி ஏற்றப்பட்ட மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் தீப மலை உச்சியில் ஜோதிப் பிழம்பாய் அண்ணாமலையார் பக்தர்களுக்கு காட்சி வழங்குவார். அதன்படி இன்று (16.12.2022) நிறைவு பெற உள்ள நிலையில் நேற்று திருக்கோவிலில் உள்ள நவ கோபுரங்களும் மின் ஒளியில் மின்னுவதுடன் நகரமே மலை உச்சியில் இருந்து பார்க்கும்போது அதன் ஒளியில் மின்னும் காட்சி பிரமிக்க வைத்தது.

இந்த நிலையில் 2668 அடி உயரம் கொண்ட தீப மலையில் கடந்த டிசம்பர் ஆறாம் தேதி மாலை 5 3/4 அடி உயரமும் 300 டன் எடையும் கொண்ட மகாதீப கொப்பரையில் கடந்த 11 தினங்களாக 4500 லிட்டர் நெய் ஊற்றி 1100 மீட்டர் காடா துணியை திரியாய் பயன்படுத்தி மகா தீபமானது ஏற்றப்பட்டு வந்தது.

Also see... திருவண்ணாமலையும்.. ஒன்பது கோபுரங்களும்...

இன்று மகா தீபம் ஆனது நிறைவு பெற உள்ள நிலையில் நேற்று ஏராளமான பக்தர்கள் தீப மலைக்குச் சென்று அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து ஜோதிப்பிழம்பாய் மகா தீப வடிவில் காட்சி கொடுத்த அண்ணாமலையாரை சாமி தரிசனம் செய்தனர்.

First published:

Tags: Karthigai Deepam, Local News, Tiruvannamalai