முகப்பு /செய்தி /திருவண்ணாமலை / கொடியேற்றத்துடன் தொடங்கியது கார்த்திகை தீப திருவிழா.. ஜொலிக்கும் திருவண்ணாமலை!

கொடியேற்றத்துடன் தொடங்கியது கார்த்திகை தீப திருவிழா.. ஜொலிக்கும் திருவண்ணாமலை!

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

Tiruvannamalai karthigai deepam | வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruvannamalai | Tiruvannamalai

நினைத்தாலே முக்தி தரக்குடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக தொடங்கியது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் 63 உயர தங்க கொடி மரத்தின் முன்பு எழுந்தருளியவுடன் 6;10 மணி அளவில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழுங்க விருச்சக லக்கினத்தில் கொடியேற்றப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி கோஷமிட்டனர். இந்த திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் கொடியேற்ற நிகழ்வை காண திருவண்ணாமலை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

இதில் சட்டபேரவை துணை சபாநாயகர் கு பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் தலைமையில் 1000த்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

First published:

Tags: Deepam festival, Karthigai Deepam, Local News, Tiruvannamalai