ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

கார்த்திகை தீபம்: திருவண்ணாமலையில் தீபத்திருவிழா.. மகாதீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை!

கார்த்திகை தீபம்: திருவண்ணாமலையில் தீபத்திருவிழா.. மகாதீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை!

மலையேறும் தீப கொப்பரை

மலையேறும் தீப கொப்பரை

Karthigai Deepam 2022: தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மகா தீப பஞ்சலோகத்தால் ஆன தீப கொப்பரைக்கு 300 கிலோ எடை கொண்டதாகும்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai | Tiruvannamalai

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை தீபத்திருவிழா நடைபெறுவதையொட்டி, இன்று தீப கொப்பரைக்கு பூஜை செய்யப்பட்டது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினசரி சாமி வீதியுலாவை பக்தர்கள் கண்டு களித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விழாவில் பத்தாம் நாளான நாளை 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த தீபாமானது தொடர்ந்து 10 நாட்கள் அணையாமல் எரியும்.

இந்த நிலையில், தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மகா தீப பஞ்சலோகத்தால் ஆன தீப கொப்பரைக்கு 300 கிலோ எடை கொண்டதாகும். நாளை மலை உச்சியில் தீபம் ஏற்றப்படவுள்ள நிலையில், இன்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொப்பரையை ஊழியர்கள் மலை உச்சிக்கு கொண்டு செல்ல தொடங்கினர்.

கைகளில் தூக்கியவாறு ஊழியர்கள் கொப்பரையை மலை உச்சியில் கொண்டு சேர்ப்பர். இந்த தீப கொப்பரையில் நாளை மாலை மகா தீபம் ஏற்றப்படும்.

First published:

Tags: Deepam festival, Karthigai Deepam, Local News, Tiruvannamalai