முகப்பு /செய்தி /திருவண்ணாமலை / மாட்டு பொங்கல்: சூரிய பகவானுக்கு காட்சி கொடுத்த அண்ணாமலையார்.. பக்தர்கள் நெகிழ்ச்சி!

மாட்டு பொங்கல்: சூரிய பகவானுக்கு காட்சி கொடுத்த அண்ணாமலையார்.. பக்தர்கள் நெகிழ்ச்சி!

அண்ணாமலையார்

அண்ணாமலையார்

Tiruvannamalai Festival | இன்று ஒரு நாள் மட்டுமே முப்பது முக்கோடி தேவர்களுக்கும் அண்ணாமலையார் காட்சி தருவார் என்பது ஐதீகம்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruvannamalai | Tiruvannamalai

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி திட்டு வாசற்படியில் சூரிய பகவானுக்கு அண்ணாமலையார் காட்சி கொடுத்தார்.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி தை மாதம் இரண்டாம் நாளான இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து கோயிலில் உள்ள நந்தி பகவானுக்கு லட்டு, முறுக்கு, இனிப்பு வகைகள், காய்கறி மற்றும் பழவகைகளால் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி திட்டு வாசற்படியில் சூரியனுக்கு காட்சி அளித்தனர். இதில் திரளான பக்தர்கள் "அண்ணாமலையாருக்கு அரோகரா" என பக்தி முழக்கமிட்டு அண்ணாமலையாரையும் சூரிய பகவானையும் ஒரு சேர தரிசனம் செய்தனர்.

முன்னதாக கோயிலின் கருவறை முதல் 1000 கால்மண்டபம் வரை உள்ள 5 நந்தி பகவானுக்கு அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் காட்சி கொடுத்தனர். இதேபோல் இன்று ஒரு நாள் மட்டுமே முப்பது முக்கோடி தேவர்களுக்கும் அண்ணாமலையார் காட்சி தருவார் என்பது ஐதீகம்.

இதனையடுத்து அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன் மாடவீதியில் காலை முதல் மாலை வரை 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி காட்சியளிப்பார். தொடர்ந்து இன்று மாலை 7 மணி அளவில்திருவூடல் நிகழ்வு நடைபெறும்.

First published:

Tags: Pongal 2023, Tiruvannamalai