திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வெட்டியாந்ததொழுவம், காப்பு காடு, சிறுமூர், எஸ்.யூ.வனம் முள்ளண்டிரம், பூசிமலைக்குப்பம், அடையப்புலம்,
உள்ளிட்ட கிராமங்களில் தற்போது பகிரங்கமாக ஏரிப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகின்றன.
மேலும் தற்போது தமிழக அரசின் டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்கள் விலை நாளுக்கு நாள் உயர்வதால் குடிமகன்கள் செய்வதெரியாமல் கள்ளச்சாராயம் மோகத்தில் மூழ்கியுள்ளனர்.
கள்ளச்சாராயம் பாக்கெட் ரூ.25 வீதம் விற்பனை செய்யப்படுவதால் கூலி தொழிலாளிகள் குடிமகன்கள் லிஸ்டில் தற்போது பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகளவில் கள்ளச்சாராயம் குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.
மேலும் இது சம்மந்தமாக கிராம பொதுமக்கள் பலமுறை மாவட்ட
நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் புகார் அளித்தால் மறுநாள் சாராயா வியாபாரி சம்மந்தப்பட்டவர்கள் மீது கொடூர தாக்குதல், மிரட்டல் உள்ளிட்டவகைள் செய்வதால் பொதுமக்கள் புகார் அளிக்க பயப்படுகின்றனர்.
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கள்ளச்சாராயம் விற்பனை பகிரங்கமாக விற்கபடுகின்றன.
Also Read : கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: சதி கும்பலுக்கு துணைபோகும் உளவுத்துறை.. திருமாவளவன் குற்றச்சாட்டு
நாளுக்கு நாள் வியாபாரம் சூடுப்பிடிப்பதால் கள்ளச்சாராயம்
தற்போது ஆர்.எஸ்.பவுடர் பயன்படுத்தி சாராயம் தயாரிக்கப்படுகின்றன. இதனால் குடிப்பவர்களின் கல்லீரல் நுரையீரல் பாதிக்கபட்டு நாளைடைவில் நோய்வாய்பட்டு இறக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆரணி தாலுக்கா போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து வருங்கால சந்ததியினர்கள் எதிர்காலத்தை காப்பாற்ற கள்ளச்சாராயம் முற்றிலும் ஓழிக்க வேண்டும் என்று கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உங்கள் நகரத்திலிருந்து(திருவண்ணாமலை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.