ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

கார்த்திகை தீபம்.. 6 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் - ஆட்சியர் உத்தரவு

கார்த்திகை தீபம்.. 6 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் - ஆட்சியர் உத்தரவு

கார்த்திகை தீபம் முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடல்

கார்த்திகை தீபம் முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடல்

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும் இந்து சமய அறநிலைத்துறையும் இணைந்து மேற்கொண்டு வருகிறது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai, India

நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடைபெற உள்ளது.

பத்து நாட்கள் நடைபெறக்கூடிய இந்த திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அன்று காலை 6:00 மணி அளவில் கோவில் கருவறையில் பரணி தீபம் அன்று மாலை 6 மணி அளவில் கோவில் பின்புறம் உள்ள 2268 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம் ஏற்றப்படும்.

இந்த தீப தரிசனத்தை காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம் வெளி மாவட்டங்களில் இருந்து 25 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என மாவட்ட நிர்வாகத்தினரால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகமும் இந்து சமய அறநிலைத்துறையும் இணைந்து மேற்கொண்டு வருகிறது.

Also see... அண்ணாமலையார் கார்த்திகை தீபத் திருவிழா: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திருவண்ணாமலை ஆட்சியர்!

இந்நிலையில் திருவண்ணாமலை நகரப் பகுதிக்கு அருகாமையில் இயங்கி வரும் 4 அரசு சில்லறை மதுபான கடைகள் மற்றும் மதுபான கடைகளுடன் இணைந்த 5 உரிமம் பெற்ற மதுக்கூடங்களை

டிசம்பர் 2- ம் தேதி முதல் 7- ம் தேதி வரை 6 நாட்கள் மூடி வைக்க ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: District collectors, Karthigai Deepam, Tasmac, Thiruvannamalai