ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

திருக்கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலையில் 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை!

திருக்கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலையில் 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை!

திருவண்ணாமலை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

திருவண்ணாமலை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

வரும் டிசம்பர் 6ஆம் தேதி திருக்கார்த்திகை தீபம் மலையுச்சியில் ஏற்றப்படுகிறது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai | Tiruvannamalai

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு வருகிற டிசம்பர் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினசரி சாமி வீதியுலாவை பக்தர்கள் கண்டு களித்து வருகின்றனர்.

விழாவின் 10ஆம் நாளான டிசம்பர் 6ஆம் தேதி மலையுச்சியில் தீபம் ஏற்றப்படும். இதனையொட்டி பொதுமக்கள் அனைவரும் அவர்களது வீடுகளில் விளக்கேற்றி தரிசனம் செய்வர்.

இந்த நிலையில், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு வருகிற டிசம்பர் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்  முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

First published:

Tags: Deepam festival, Karthigai Deepam, Local News, Tiruvannamalai