திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக, டிசம்பர் 6ம் தேதி மகாதீப பெருவிழா நடைபெற உள்ளது.
தீபத்திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வருவது வழக்கம். பொதுமக்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 14 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 9 ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயிவே அறிவித்துள்ளது.
இதில் டிசம்பர் 6-ம் தேதி மட்டும் 25 லட்சம் பக்தர்களும், மகா தேரோட்டத்தின் போது 5 லட்சம் பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 7ம் தேதி பொளர்ணமியும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also see... திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: 30 லட்சம் பக்தர்கள்.. 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்!
மேலும் சிறப்பு ரயில்கள் டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரே, பொதுமக்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2700 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian Railways, Karthigai Deepam, Special trains, Tiruvannamalai