ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

வேட்டி, சட்டை அணிந்து பொங்கல் கொண்டாடிய திருவண்ணாமலை ஆட்சியர்!

வேட்டி, சட்டை அணிந்து பொங்கல் கொண்டாடிய திருவண்ணாமலை ஆட்சியர்!

பொங்கல் கொண்டாட்டத்தில் மாவட்ட ஆட்சியர்

பொங்கல் கொண்டாட்டத்தில் மாவட்ட ஆட்சியர்

Thiruvannamalai Collector Pongal Celebration | மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப் சிங் ஆகியோர் கலந்து கொண்டு பாரம்பரிய முறைப்படி வேட்டி சட்டை அணிந்து சமத்துவ பொங்கல் வைத்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai, India

திருவண்ணாமலை பாரம்பரிய முறைப்படி வேட்டி சட்டை அணிந்து மாவட்ட ஆட்சியர்  சமத்துவ பொங்கல் கொண்டாடினார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் பாரம்பரிய முறைப்படி ஊராட்சித்துறை அலுவலர்கள் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப் சிங் ஆகியோர் கலந்து கொண்டு பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை அணிந்து சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினார்கள்.

சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பச்சரிசி பொங்கல் வைத்து பின்னர் சிறப்பு பூஜை செய்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்கள் பொங்கல் விழாவை கொண்டாடினார்கள்.

First published:

Tags: Local News, Pongal 2023, Tiruvannamalai