Home /News /tiruvannamalai /

யுகேஜி படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப்பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

யுகேஜி படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப்பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

சம்பவம் நடந்த பள்ளியில் விசாரணை நடத்தும் போலிசார்

சம்பவம் நடந்த பள்ளியில் விசாரணை நடத்தும் போலிசார்

விசாரணை நடத்திய போலீசார், திருச்செந்தூரில் இருந்து திரும்பும்போது, எட்டயபுரத்தில் பள்ளி ஆசிரியரை கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai, India
    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே தனியார் பள்ளியில் யுகேஜி படித்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டதுடன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த தம்பதியின் 4 வயது மகள் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வருகிறார். இந்த பள்ளியை நடத்துபவரின் கணவர் காமராஜ், உலகபட்டு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    அடிக்கடி மனைவியின் பள்ளிக்கு வந்து செல்லும் அரசு பள்ளி ஆசிரியர், கடந்த வாரம் சேத்துப்பட்டு தம்பதியின் மகளுக்கு சாக்லெட் கொடுத்து அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    துடைப்பத்துடன் குப்பைகளை அள்ளும் அரசுப்பள்ளி மாணவி… ஆரணியில் பரபரப்பு

    இதனால் அந்த சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, பாலியல் தொந்தரவு குறித்து தெரியவந்ததை அடுத்து மாணவியின் பெற்றோர் போளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    இதன்படி விசாரணை நடத்திய போலீசார், திருச்செந்தூரில் இருந்து திரும்பும்போது, எட்டயபுரத்தில் பள்ளி ஆசிரியரை கைது செய்தனர். இந்நிலையில், கைதான ஆசிரியர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    குழந்தை டான்யாவுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு... போனில் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

    இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவி படித்த சேத்துப்பட்டு மேல்நிலைப் பள்ளியில் முன்பு குவிந்த உறவினர்கள் அப்பள்ளியின் பேனரை கிழித்தனர். அங்கிருந்த காவலர்கள் அவர்களை விரட்டியடித்தனர். போளூர் டிஎஸ்பி தலைமையில் காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். போளூர் கல்வி மாவட்ட அலுவலர் தயாளன் பள்ளியில் விசாரணை நடத்தினார்.

    ஆரணி செய்தியாளர் ம.மோகன்ராஜ்
    Published by:Musthak
    First published:

    Tags: Child Abuse, Tiruvannamalai

    அடுத்த செய்தி