ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

திருக்கார்த்திகை தீப திருவிழா 2022... திருவண்ணாமலையில் இன்று தேரோட்டம் தொடங்கியது!

திருக்கார்த்திகை தீப திருவிழா 2022... திருவண்ணாமலையில் இன்று தேரோட்டம் தொடங்கியது!

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

2 ஆண்டுகளுக்கு பிறகு மாடவீதிகளில் திருக்கார்த்திகை தீபத் தேரோட்ட திருவிழா இன்று காலை தொடங்கியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai, India

நினைத்தாலே முக்தி தரும் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் கடந்த மாதம் 27ஆம் தேதி திருக்கார்த்திகை தீப திருவிழா கொடியோற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. திருக்கார்த்திகை தீப திருவிழாவின் 7ஆம் நாளான இன்று பஞ்ச மூர்த்திகளின் தேரோட்டம் தொடங்கியது.

அதிகாலையில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பின்னர் விநாயகர், முருகர், உண்ணாமுலை சமேத அண்ணாமலையார், பராசக்தி மற்றும் சண்டிகேஷ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் தேரினில் எழுந்தளுளினர்.

பின்னர் காலை 6.50 மணியளிவில் விநாயகர் தேரோட்டம் துவங்கியது. பக்தர்கள் விநாயகர் தேரினை வடம் பிடித்து மாடவீதிகளில் வலம் வந்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக நடைபெறாத தேரோட்டம் இரண்டு ஆண்டுகள் கழித்து இன்று மாடவீதிகளில் வலம் வந்ததால் பக்தர்கள் உற்சாகமடைந்தனர்.

Also see... கார்த்திகை தீபத்திருவிழா 2022: தீபம் ஏற்றும் முறைகளும் அதன் பலன்களும்..!

இதனை தொடந்து முருகர் தேரோட்டம் நடைபெற்ற பின்னர் மதியம் 1 மணியளவில் அண்ணாமலையாரின் மகாரத தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர் மஹா ரதத்தை வடம் பிடித்து இழுப்பார்கள்.

மகா ரத தேரோட்டத்தையொட்டி 5000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Karthigai Deepam, Thiruvannamalai