Home /News /tiruvannamalai /

ஸ்பீக்கர் பாக்ஸ் விழுந்து 3 மாத குழந்தை பரிதாப பலி- திருவண்ணாமலையில் சோகம்

ஸ்பீக்கர் பாக்ஸ் விழுந்து 3 மாத குழந்தை பரிதாப பலி- திருவண்ணாமலையில் சோகம்

உயிரிழந்த குழந்தை

உயிரிழந்த குழந்தை

திருவண்ணாமலையில் ஸ்பீக்கர் பாக்ஸ் தவறி விழுந்து 3 மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

திருவண்ணாமலை அடுத்த பிச்சனந்தல் என்ற குக்கிராமத்தில் வசித்து வருபவர் விஜய். அவருக்கு வயது 28. இவரது மனைவி பரணி. இவர்களுக்கு அஸ்வின் என்ற மூன்று வயது, சிறுவனும் பிறந்து மூன்று மாதமே ஆன சுபஸ்ரீ குழந்தையும் இருந்தது. விஜய் அவரது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

விஜய் கூலிவேலை செய்து வருபவர் ஆவார். விஜய் சந்தோசமாக குடும்பத்தோடு வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் விஜய் நேற்று வேலைக்கு சென்றிருந்த நிலையில் மதியம் வேலை என்பதால் விஜய்யின் பெற்றோர் வீட்டுக்கு எதிரே உள்ள மரத்தடியில் உறங்கிக் கொண்டிருந்தனர். விஜயின் மனைவி பரணி, தனது இரண்டாவது குழந்தை சுபஸ்ரீயை ஹாலில் படுக்க வைத்துவிட்டு தனது முதல் குழந்தையான அஸ்வினுக்கு 6 அடி தூரத்தில் இருந்து உணவு ஊட்டிக்கொண்டிருந்தார்.

சற்றும் எதிர்பாராத வகையில் அஸ்வினுக்கு உணவை ஊட்டி விட்டு திரும்பிப் பார்க்கும் நொடியில் மேலே செல்பில் இருந்த ஸ்பீக்கர் பாக்ஸ் திடீரென கீழே விழுந்தது. கீழே பச்சிளம் குழந்தை சிரித்து விளையாடிக் கொண்டிருந்தபோது குழந்தையின் தலையில் விழுந்ததாக சொல்லப்படுகிறது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் செய்வதறியாமல் பரணி கூச்சலிட்டு உள்ளார். சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து குழந்தையை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி இரவு குழந்தை உயிரிழந்துள்ளது.
கண் இமைக்கும் நேரத்தில் மேலே இருந்து ஸ்பீக்கர் பாக்ஸ் குழந்தையின் தலையில் விழுந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Karthick S
First published:

Tags: Thiruvannamalai

அடுத்த செய்தி