ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

15 நாட்களாக ஒரே இடத்தில் இருக்கும் நல்ல பாம்பு: அம்மன் வந்து இறங்கியதாக பொட்டு வைத்து பூஜை செய்யும் கிராம மக்கள்!

15 நாட்களாக ஒரே இடத்தில் இருக்கும் நல்ல பாம்பு: அம்மன் வந்து இறங்கியதாக பொட்டு வைத்து பூஜை செய்யும் கிராம மக்கள்!

பாம்புக்கு பூஜை செய்த பொதுமக்கள்

பாம்புக்கு பூஜை செய்த பொதுமக்கள்

தாடிநொளம்பை கிராமத்தை சுற்றி உள்ள வல்லம், தென்கரை,பெரும்பாக்கம், ஊர்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து தினந்தோறும் மக்கள் திரண்டு வழிபாடு செய்து வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • thiruvannmalai, India

  வந்தவாசி அருகே 15 நாட்களாக ஒரே இடத்தில் இருக்கும் நல்ல பாம்பு பால்வைத்து ஏராளமானோர் பக்தி பரவசத்தோடு வழிபாட்டு வருகின்றனர்.

  திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தாடிநொளம்பை கிராமத்தில் அருகே வல்லம் சித்தேரி உள்ளது. இந்த ஏரிக்கரை அருகே கூலி தொழிலாளி ஒருவர் விறகு வெட்டும்போது 6 அடி நீளமுள்ள நல்லபாம்பு ஒன்று மரத்தடியில் இருந்துள்ளது.

  அப்போது பாம்பை கண்டால் படையே நடுங்குவது போல் அந்த நபர் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டு பிறகு மறுநாள் வந்து பார்த்த போது மீண்டும் நல்ல பாம்பு அதே இடத்தில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஊர் கிராம மக்களுக்கு இதைப் பற்றி தெரிவித்துள்ளார்.

  இதையும் படிங்க: ஜவ்வாது மலை நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா.. நீரில் மூழ்கி இளைஞர் மரணம்

  மேலும் இதையடுத்து கிராம பொதுமக்கள் வேப்பமர நிழலில் நல்ல பாம்பு அதே இடத்தில் இருப்பதை கண்டு அம்மன் வந்து இறங்கியது போல் வழிபாடு செய்ய ஆரம்பித்தனர். இந்த நிலையில் அந்த நல்ல பாம்பு 15 தினங்களாக அதே இடத்தில் இருக்கின்றது பொதுமக்கள் தினந்தோறும் அந்த பாம்பிற்கு பால் வைத்து வழிபட்டு வருகின்றனர்.

  மேலும் தாடிநொளம்பை கிராமத்தை சுற்றி உள்ள வல்லம், தென்கரை, பெரும்பாக்கம், ஊர்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து தினந்தோறும் மக்கள் திரண்டு வழிபாடு செய்து வருகின்றனர்.

  செய்தியாளர் :  மோகன்ராஜ் (திருவண்ணாமலை) 

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Thiruvannamalai