ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

திருவண்ணாமலை சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் திடீர் ரத்து - இதுதான் காரணம்!

திருவண்ணாமலை சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் திடீர் ரத்து - இதுதான் காரணம்!

தேர்

தேர்

கடந்த டிசம்பர் 3ஆம் தேதி மகா தேரோட்டத்தின் போது சுப்பிரமணியர் தேர் பழுதடைந்தது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruvannamalai, India

  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புதிதாக கட்டமைக்கப்பட்ட சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் ரத்து செய்யப்பட்டது.

  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழா நவம்பர் மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. கடந்த டிசம்பர் 3ஆம் தேதி மகா தேரோட்டத்தின் போது சுப்பிரமணியர் தேர் பழுதடைந்தது. கடந்த 3 மாதங்களாக ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தேர் அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிவடைந்தது.

  இந்நிலையில் இன்று வெள்ளோட்டம் நடைபெறுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் பணிகள் முழுமையாக முடியவில்லை, 90% அளவிலான பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது. இதனால் இன்று நடைபெற இருந்த வெள்ளோட்டத்தை கோவில் நிர்வாகம் வேறு தேதிக்கு மாற்றி உள்ளது.

  இதையும் படிங்க : கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் முழுவீச்சில் முன்னேற்பாடு பணிகள்

  பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் பின்னர் வெள்ளோட்டத்திற்கான தேதி அறிவிக்கப்படும் என கோயில் இணை ஆணையர் அசோக் குமார் தெரிவித்துள்ளார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Hindu Temple, Thiruvannamalai