சாத்தனூர் அணையில் குளிக்கச் சென்ற நபரை திருட்டு மீன் பிடிப்பதாக கூறி அடித்துக் கொன்ற சம்வத்தில் அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிய வேண்டும் என மருத்துவமனை முன்பு அவரது உறவினர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை அருகில் கடப்பன் குட்டை கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவர் கடந்த 15 ஆம் தேதி காலையில் குளிப்பதற்காக ஆற்றங்கரைக்கு சென்றபோது அவரை மீன்பிடி குத்தகைதாரர் அதிமுகவை சேர்ந்த கார்த்தி தரப்பினர் ஒன்று சேர்ந்து திருட்டுத்தனமாக ஆற்றில் மீன் பிடிக்க வந்ததாக கூறி சரமாரியாக தாக்கியுள்ளனர். தாக்கியவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் குடும்பத்தோடு கொன்று விடுவேன் என்று மிரட்டியதால் உயிருக்கு பயந்து வீட்டிலேயே நாட்டு வைத்தியம் எடுத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு….
இந்த நிலையில் பழனி 18ஆம் தேதி அதிகாலையில் உயிரிழந்துள்ளார்.இறந்து போன பழனியின் மகன் தேவேந்திரன் சாத்தனூர் அணை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாத்தனூர் அணை போலீசார் பழனியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பழனியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சந்தேக மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்ய கோரி, பழனியின் உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணஅறை முன்பாக ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதிமுக ஒப்பந்ததாரர் கார்த்தி ஓட்டுனர் திவாகர் அடியார்கள் மீது உடனடியாக காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK member, Crime News, Thiruvannamalai