Home /News /tiruvannamalai /

டிசம்பர் 6-ம் தேதி ஏற்றப்படும் திருவண்ணாமலை மகா தீபம்

டிசம்பர் 6-ம் தேதி ஏற்றப்படும் திருவண்ணாமலை மகா தீபம்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

Tiruvannamalai | உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை மகாதீபம் டிசம்பர் 6-ம் தேதி 2668 அடி உயரம் கொண்ட மலை மீது ஏற்றப்பட உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai, India
    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றான திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது. அத்துடன் நவம்பர் 27ஆம் தேதி அண்ணாமலையார் திருக்கோவிலில் அண்ணாமலையார் சன்னதி அருகே உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் திருக்கார்த்திகை தீபத் திருவிழா தொடங்க உள்ளது.

    தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் நிறைவு நாள் டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு திருக்கோவில் கருவறையின் முன்பு பரணி தீபமும் அதனைத் தொடர்ந்து திருக்கோவில் பின்புறம் அமைந்துள்ள 2668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

    இந்த நிலையில் மகா தீப திரவகளுக்கான பூர்வாங்கப் பணி வருகின்ற 30ஆம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் அமைந்துள்ள சம்பந்த கணேசர் சன்னதியில் பந்தக்கால் முகூர்த்த விழா நடைபெற உள்ளது. தொடர்ந்து அண்ணாமலையார் திருக்கோயில் ராஜ கோபுரம் அருகே பந்த கால் நடப்பட்டு தீப திருவிழாக்கான பூர்வமாக பணி நடைபெறும்.



    Also see... டிடிஃஎப் வாசன் அதிவேக ரைடு.. ஆடிப்போன ஜி.பி.முத்து - கேஸ் போட்ட கோவை போலீஸார்

    குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபத் திருவிழா கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்ட நிலையில் இந்த வருடம் தீபத் திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் சாமி மாட வீதியில் வலம் வரும் என பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    செய்தியாளர்:அ.சதிஷ், திருவண்ணாமலை
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Deepam festival, Karthigai Deepam, Tiruvannamalai

    அடுத்த செய்தி