இந்து சமய அறநிலை துறையின் பரணி தீபம் மகா தீபம் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் இணையதளம் முடங்கியதாக பக்தர்கள் குற்றம்சாட்டிய நிலையில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 6ஆம் தேதி திருவண்ணாமலை மகா தீப தரிசனத்தை காண ஆன்லைன் டிக்கெட்டு புக்கிங் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. அதில் பரணி தீபத்தை காண ரூ.500 கட்டண தரிசனத்தில் 500 நபர்களும், மகா தீப தரிசனத்தை ரூ. 600 கட்டணத்தில் 100 நபர்களும், 500 ரூபாய் கட்டணம் தரிசனத்தில் 1000 நபர்களும் விற்க திட்டமிடப்பட்டது.
மகாதீபம் பரணி தீபம் ஆன்லைன் டிக்கெட் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை https://annamalaiyar.hrce.tn.gov.in இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
ஆனால் காலை 10:30 மணி வரை இணையதளம் வேலை செய்யவில்லை. இதனால் ஆன்மிக பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் கேட்ட பொழுது, ஆன்லைன் இணையதளம் வேலை செய்வதாகவும் அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது, மீதம் 80 டிக்கெட் மட்டுமே உள்ளது என தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Deepam festival, Karthigai Deepam, Online, Thiruvannamalai, Ticket booking