முகப்பு /செய்தி /திருவண்ணாமலை / நச்சுனு கார்.. டிப் டாப் உடை.. பணம் பறிக்க பக்கா ப்ளான்.. வசமாக சிக்கிய போலி ஐஏஎஸ் அதிகாரி!

நச்சுனு கார்.. டிப் டாப் உடை.. பணம் பறிக்க பக்கா ப்ளான்.. வசமாக சிக்கிய போலி ஐஏஎஸ் அதிகாரி!

கைது செய்யப்பட்ட சுபாஷ்

கைது செய்யப்பட்ட சுபாஷ்

Thiruvannamalai Fake IAS Arrest | கைது செய்யப்பட்ட நபர் மீது மதுரவாயில் உள்ளிட்ட காவல்நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து காவல்துறையினரால் தேடி வந்தது விசாரணையில் அம்பலம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruvannamalai, India

மின்சாரத் துறையில் பணி மாறுதல் பெற்று தருவதாக பணம் பறிக்க முயன்ற போலி ஐஏஎஸ் அதிகாரியை திருவண்ணாமலை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பகுதி வானவில் நகரில் வசிப்பவர்  சௌந்தர்ராஜன், எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மின்சாரத் துறையில் பணியாற்றி வருகிறார். திருவண்ணாமலை ஈசான்ய லிங்கத்தை தரிசனம் செய்ய சென்ற போது சௌந்தர்ராஜனுக்கும், சென்னை விருகம்பாக்கம் காமராஜர் சாலையைச் சேர்ந்த  சுபாஷ்  என்பவர் தன்னை ஐஏஎஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு பழகியுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் பணியாற்றி வரும் சௌந்தர்ராஜன் மனைவிக்கு பணி மாறுதல் பெற்று தருவதாக சுபாஷ் கூறியுள்ளார்.எந்தவிதமான பரிந்துரையும் இன்றி அவர் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பணி மாறுதல் பெற்றுள்ளார். தன்னால் தான் பணி மாறுதல் கிடைத்தது எனக் கூறி சௌந்தர்ராஜனிடம் பணம்  கேட்டு திருவண்ணாமலைக்கு வந்த சுபாஷ்  பணம் கேட்டு தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் சௌந்தர்ராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் சுபாஷை கைது செய்து விசாரணை நடத்தியதில் மதுரவாயில், சிந்தாதிரிபேட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளது தெரிய வந்தது. இவரை சென்னை போலீசார் தேடி வந்த நிலையில் திருவண்ணாமலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுபாஷிடம் ஐ.ஏ.எஸ் ஆர்.டி.ஓ முதன்மை செயலாளர் என பல்வேறு அரசு பதவிகளுக்கான அரசு சின்னத்துடன் கூடிய போலி அடையாள அட்டைகள் இருந்ததாகவும், தன்னை அரசு அதிகாரி என கூறிவேலை வாங்கி தருவதாகவும், பல்வேறு பிரச்சனை முடித்து வைப்பதாகவும் கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

மின்சார துறையில் பணி மாறுதல் பெற்று தருவதாக எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளரை பணம் கேட்டு தாக்கிய வழக்கில் போலி ஐஏஎஸ் அதிகாரியை கைது செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் : சதிஷ் அண்ணாமலை

First published:

Tags: Crime News, Local News, Thiruvannamalai