முகப்பு /செய்தி /திருவண்ணாமலை / திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. திருவண்ணாமலையில் பரபரப்பு

திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. திருவண்ணாமலையில் பரபரப்பு

திருவண்ணாமலை பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருவண்ணாமலை பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

Thiruvannamalai Petrol Bomb Attack | மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியது எதிர்வீட்டு சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruvannamalai, India

திருவண்ணாமலையில் திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு இருவர் தப்பியோடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை நகரில் உள்ள கரையான்செட்டி தெருவில் வசித்து வரும் நகர துணை அமைப்பாளரும் தொழிலதிபருமான சங்கர் என்பவரின் வீட்டில் நள்ளிரவு ஒரு மணி அளவில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு தப்பி சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மளமளவென எறிந்து கொண்டிருந்த சத்தம் கேட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் வெளியே வந்து பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நள்ளிரவு ஒரு மணி அளவில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்தும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வராமல் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியான தகவல் அறிந்து ஏழு மணி நேரம் கழித்தே காவல்துறையினர் விசாரணைக்காக வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெட்ரோல் குண்டு வீசியது எதிர்வீட்டு சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ள நிலையில் அதனை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த 12 ஆம் தேதி நள்ளிரவு திருவண்ணாமலையில் நான்கு இடங்களில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் ரூ.72 லட்சம் பணம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது திமுக பிரமுகர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் மேலும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: சதீஷ்

First published:

Tags: Crime News, Local News, Thiruvannamalai