பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் விளங்குகிறது.
இந்த கோயிலின் திருக்கார்த்திகை தீப திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்றது. தினசரி சாமி வீதியுலாவை பக்தர்கள் கண்டு களித்தனர்.
விழாவின் பத்தாம் நாள் 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த தீபமானது தொடர்ந்து 10 நாட்கள் அணையாமல் எரியும். அந்த வகையில், இந்த ஆண்டு தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மகா தீப பஞ்சலோகத்தால் ஆன தீப கொப்பரைக்கு மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது.
இதையும் படிங்க : கரையை நெருங்கும் மாண்டஸ் புயல் - ரயில் பயணிகளுக்கு முக்கிய அப்டேட்
2668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது பஞ்சலோகத்தால் ஆன 5 3/4 அடி உயரமும் 300 கிலோ எடையும் கூடிய மகா தீப கொப்பரையில் 4500 லிட்டர் நெய் நிரப்பி 1100 மீட்டர் காடா துணியை திரியாக பயன்படுத்தி பர்வத ராஜகுல மரபினர் மகா தீபத்தை ஏற்றினர்.
மகா தீபத்தை காண பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து 35 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்ததால் அவர்களுக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகளும் தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன.
இந்நிலையில், தற்போது மாண்டஸ் புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஆனாலும், சாரல் மழையிலும் திருவண்ணாமலை தீபம் சுடர் விட்டு எரிந்து கொண்டுதான் இருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Karthigai Deepam, Tiruvannamalai